புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 அக்., 2012


ஜனாதிபதியின் ஆலோசகர் பிள்ளையானின் வீடு பற்றிய விண்ணப்பம் போலியானது! மக்கள் அஞ்ச வேண்டாம் சீ.யோகேஸ்வரன்
தமது கட்சிக்கும் அரசிற்கும் சார்பாக செயற்பட்டவர்கட்கு மாத்திரம் வீடு அமைத்துத் தருவதாக புரளியை  கிளப்பி போலி விண்ணப்பங்கள் விநியோகித்து மக்களை பீதியடைய வைத்த ஜனாதிபதியின் ஆலோசகர் சி.சந்திரகாந்தனின் (பிள்ளையான்) செயற்பாட்டில் எந்தவித உண்மையும் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக இந்திய அரசின் உதவியுடன் 4000 வீடுகள் அமைத்துத் தரப்பட உள்ளதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இவற்றை எந்தவித அரசியல் மற்றும் தனி மனித தலையீடுகளை உள்வாங்கி செயற்படுத்தக் கூடாது என்றும் சுயாதீனமான முறையில் வீடுகள் கட்டப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்திடமும் வலியுறுத்தி உள்ளதுடன் இந்தியா சென்றுள்ள எமது கட்சியின் குழுவினர் இந்திய அதிகாரிகளையும் வலியுறுத்தியுள்ளனர்.
இவ்வாறாக பல வித ஒழுங்கு படுத்தல்கள் எல்லாம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தானும் குழம்பியது காணாது என்று மக்களையும் குழப்புவதா முன்னாள் முதல்வரும் மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதி ஆலோசகருமானவருக்கு லட்சணம்
கடந்த பல தேர்தல்களில் மக்கள் செல்வாக்கு அற்றுள்ள நிலையில் சுயமாக செல்வாக்கு உள்ளதாக மார்புதட்ட முடியாத நிலையில் பிரதேச சபை தேர்தல் நடத்தக் கூடிய வாய்ப்பு உள்ளதால் தமது ஆதரவாளர்கள் மூலம் இவ்வாறான போலி விண்ணப்பங்கள் விநியோகித்து மக்களை குழப்ப முனைவது அரசியல் வெறுமையில் வறுமையை காட்டுகிறது.
கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட 20,000 வீடுகள் அமைக்கப்படவுள்ள நிலையில் இவரின் இவ்வாறான செயற்பாடு அறியாமையின் வெளிப்பாடே.
பல மக்கள் அவல வாழ்வுக்கு கடந்த கால நிகழ்காலங்களில் காரணமாய் இருந்த  பிள்ளையான் இனிவரும் நாட்களிலாவது எதுவும் செய்யாது இருப்பது சாலச்சிறந்தது.
எவர்கள் எவ்வாறு நடந்துகொண்டாலும் அது அவர்களது மனத் திருப்திக்கு மாறாக மக்களாகிய நீங்கள் என் நிலையிலும் குழம்பாமல் இருங்கள். உரிய நேரத்தில் உரிய கடமையை சரிவர செயற்படுத்துவதற்கு பாகுபாடின்றி சகல மக்களுக்கும் எமது தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்றும் உங்களுக்கு பக்கபலமாய் செயற்படும் என அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ad

ad