புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 அக்., 2012

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் கால் இறுதிக்கு முன்னேறிய சுவிட்சர்லாந்து வீரர் ரொஜர் பெடரர் தர வரிசையில் முதல் இடத்தை தக்கவைத்து கொண்டுள்ளார்.
முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள ஷாங்காய் ரோலர்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி சீனாவில் நடைபெற்று வருகின்றது.



இந்த போட்டியில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3ஆவது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் முதல் நிலை வீரர் ரொஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), சக நாட்டு வீரர் ஸ்டானிஸ்லாஸ் வோங்ரிங்காவை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பெடரர் 4-6, 7-6, 6-0 என்ற செட் கணக்கில் வோவ்ரிங்காவை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார். இந்த போட்டியில் கால் இறுதிக்கு முன்னேறினால் பெடரர், தர வரிசையில் முதலிடத்தில் நீடிக்க முடியும் என்ற நிலை இருந்தது. இந்த வெற்றியின் மூலம் பெடரர் ஒட்டுமொத்தமாக 300ஆவது வாரமாக தரவரிசையில் முதல் இடத்தில் நீடிக்கிறார். பெடரர் வெற்றியால், செர்பியா வீரர் ஜொகோவிச்சின் முதல் இடத்தை எட்டும் முயற்சியில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.

மற்றொரு ஆட்டத்தில் உலகின் 2ஆம் நிலை வீரர் நோவாக் ஜொகோவிச் 6-3, 6-3 என்ற நேர்செட்டில் ஸ்பெயின் வீரர் பெலிசியானா லோபோஸ்சை வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றார். இன்னொரு ஆட்டத்தில் 3ஆம் நிலை வீரர் ஹென்டி முர்ரே (இங்கிலாந்து) 6-2, 6-2 என்ற நேர் செட்டில் உக்ரைன் வீரர் அலெக்சாண்டரை சாய்த்து கால் இறுதிக்குள் நுழைந்தார்.

ad

ad