புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 அக்., 2012

விரிவுரையாளர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தற்காலிக போர் நிறுத்தமே தவிர நிலையானதல்ல. எப்போதும் போர் வெடிக்கலாம் என்று பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் மேற்கண்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் போன்றதொரு நடவடிக்கையே தற்போது பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தற்காலிக போர் நிறுத்தமே தவிர நிலையானதல்ல. எப்போதும் போர் வெடிக்கலாம் என்று
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மற்றும் நிதியமைச்சின் செயலாளர் பி. பி.ஜயசுந்தர ஆகியோர் எழுத்து மூலமாக வழங்கிய உறுதிமொழிகளை காப்பாற்ற வேண்டும். அரசாங்கம் நல்லொழுக்கத்தையும் தனது சிறந்த பண்புகளையும் வெளிப்படுத்த இது சிறந்த சந்தர்ப்பமாகும். அத்துடன் தேசிய வருமானத்திலிருந்து 6 வீதத்தை கல்விக்காக ஒதுக்கிக் கொள்ளும் போராட்டம் முடிவடையவில்லை என்றும் அச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

நாவலயில் அமைந்துள்ள இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டின் போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. இதன் போது உரையாற்றிய பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கத்தின் தலைவர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி கூறுகையில்

தோல்வியில் விரிவுரையாளர்களின் பணிபகிஷ்கரிப்பு போராட்ட முடிவிற்கு கொண்டு வரப்படவில்லை. தற்காலிகமாகவே கைவிடப்பட்டுள்ளது. அரசாங்கத்தில் எழுத்து மூலமான உறுதி மொழிகள் மீறப்படும் போது மீண்டும் போராட்டம் வெடித்து விடும். தேசிய மொத்த வருமானத்திலிருந்து 6 வீதத்தை கல்விக்கு ஒதுக்க வேண்டும். இது கட்டாயமாக இடம்பெற வேண்டும் என்பது எமது கோரிக்கைகளில் முக்கியமானதாகும். அதே போன்று கல்வித்துறையில் அரசியல் மயமாக்கல் மற்றும் இராணுவ மயமாக்கல் என்பன தீவிரம் கண்டுள்ளன.

இதனையும் உடனடியாக நிறுத்த வேண்டும். 2007 ஆம் ஆண்டு தொடக்கம் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் அரச தரப்புடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றனர். ஆனால் நியாயமான பதிலை வழங்க அரசு தவறிழைத்துள்ளது. சிறந்த விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை அரசு புறக்கணித்து விடுகின்றது. இவ்வாறானதொரு நிலையில் அரச தரப்புடன் ஒரே மேசையில் அமர்ந்து கொண்டு கூட்டறிக்கைகளை எம்மால் வெளியிட முடியாது. இதனால் தான் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுடனான சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை. எவ்வாறாயினும் எமது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு இரு கடிதங்களை அமைச்சர் பஷில் ராஜபக்ஷவும் நிதியமைச்சர் செயலாளர் பி. பி. ஜயசுந்தரவும் கையளித்துள்ளனர்.

இதனை மையப்படுத்தியே எமது போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. எமது தொடர் போராட்டத்தினால் அரசாங்கத்தை ஒரு நிலைப்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளோம் இது ஏனைய தொழிற்சங்களுக்கு எடுத்துக் காட்டாகும் எனக் கூறினார்.

ad

ad