புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 அக்., 2012


பான் கி மூனிடம் டெசோ தீர்மானத்தை மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு நேரில் வழங்குவார்கள்: கலைஞர் பேட்டி
திமுக தலைவர் கலைஞர் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (03.10.2012) காலை 10 மணிக்கு டெசோ அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி சென்னையில் நடந்த டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஐ.நா.வுக்கு அனுப்புவது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது. 

டெசோ மாநாட்டு தீர்மானங்களை ஐ.நா. சபை பொதுச்செயலாளர் பான் கி மூனிடம் நேரில் வழங்கப்படும் என்றும், பான் கி மூனிடம் டெசோ மாநாட்டு தீர்மானத்தை மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு ஆகியோர் நேரில் வழங்குவார்கள் என்றும் டெசோ கலந்துரையாடல் கூட்டத்தில் ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் கலைஞர்,

டெசோ மாநாட்டு தீர்மான  கருத்துக்களை ஐ.நா. மன்றத்தின் செயலாளரையும், ஜெனிவாவில் உள்ள மனித உரிமை அமைப்பிடமும் கொடுக்க இருக்கிறோம். ஏற்கனவே அறிவித்தவாறு  தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், பாராளுமன்ற  தி.மு.க. தலைவர் டி.ஆர்.பாலு, இருவரும் செல்வது குறித்து எடுத்துச் சொல்லி அதன் தொடர்பான விளக்கங்களை எல்லாம் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் விவாதித்தனர். 

கூட்டத்தில் இது தொடர்பாக ஒப்புதல் வழங்கப்பட்டது. ஜெனிவாவில் மனித உரிமை செயலாளரை பார்ப்பதற்கும், நியூயார்க்கில் ஐ.நா. பொதுச் செயலாளரை பார்ப்பதற்கும் தேதி கிடைத்தவுடன் இருவரும் டெசோ தீர்மான நகல்களுடன் செல்ல இருக்கிறார்கள். அங்கிருந்து உறுதியான தேதி இதுவரை வரவில்லை.  

இதுதொடர்பாக அவர்களிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசி வருகிறோம். உறுதியான தேதி கிடைத்தபிறகு உங்களுக்கு தெரிவிக்கப்படும். 

இலங்கை தமிழர்கள் நிலை இலங்கையில் இந்திய அரசு மூலம் நிறைவேற்றப்படும் பணிகள் திருப்தியாக இல்லை.  அந்த தகவல்களும் இந்த நகல்களுடன் இணைத்து அதுபற்றி தெளிவாக எடுத்துச் சொல்ல இருவரும் இந்த பயணத்தை மேற்கொள்கிறார்கள். 

இலங்கையில் ஈழத்தமிழர்கள் சுதந்திரமாகவும், சுயமரியாதையுடனும் வாழ வேண்டும். இதற்கான தீர்மானங்கள் டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்டு உள்ளது.  இந்த தீர்மானங்கள் ஐ.நா.சபையிலும் இந்திய அரசின் ஆதரவுடன்  ஏற்கப்பட வேண்டும். 

தி.மு.க. சார்பில் நடத்தப்படும் மனிதசங்கலிலி போராட்டத்துக்கு 3 பாதைகளை குறிப்பிட்டு கேட்டு உள்ளோம். அதற்கு இதுவரை அனுமதி கிடைக்க வில்லை. போலீசார் அனுமதி தருவார்கள் என்று நம்புகிறோம். இவ்வாறு கூறினார்.

ad

ad