அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது பாகிஸ்தான் - அவுஸ்திரேலியா அரையிறுதிக்கு தகுதி
இருபதுக்கு இருபது உலகக்கிண்ண கிரிக்கெட்போட்டிகளின் சூப்பர் 8 சுற்றிலே இன்று
நாணயசுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி இருபது ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 149 ஓட்டங்களை பெற்றது. நஷீர் ஜாம்செட் 46 பந்துகளுக்கு 55 ஓட்டங்களையும், அக்மல் 26 பந்துகளுக்கு 32 ஓட்டங்களையும் பெற்றனர். ஸ்டார்க் 3 விக்கட்டுகளைக் கைப்பற்றினார்.
அடுத்து துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 117 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.மைக்கல் ஹஸி 47 பந்துகளுக்கு 54 ஓட்டங்களை எடுத்தார். அஜ்மல் 3 விக்கெட்டுளையும், ஹசன், ஹபீஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
பாகிஸ்தான் அணி 32 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இதனடிப்படையில் அவுஸ்திரேலிய அணி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ள அதேவேளை தென்னாபிரிக்கா அரையிறுதிக்கு தகுதி பெறத்தவறியுள்ளது. இந்தியா-தென்னாபிரிக்க அணிகள்மோதும் போட்டியில் அபார வெற்றியை பெற்றால் மட்டுமே இந்தியா அரையிறுதிக்கு தகுதிபெறும் இல்லாவிடின் பாகிஸ்தான் அணியே அரையிறுதிக்குள் நுழையும்.