புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 அக்., 2012


திருப்பதிக்கு அதிக எண்ணிக்கையில் வருகை தரும் தமிழக பக்தர்களை கெளரவிக்கும் விதமாக திருப்பதி தேவஸ்தானம் அமைப்பு பிரம்மோஸ்தவப் பாடல்களை அழகு தமிழில் வெளியிட்டுள்ளது.திருப்பதியில் பிரம்மோஸ்தவம் வெகுவிமரிசையாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் திரையுலகின் மூத்த கவிஞர் வாலி எழுதிய முத்தான பத்து பக்திப் பரவசமூட்டும் பாடல
்களுக்கு அற்புதமாக இசையமைத்திருக்கிறார் வித்யாசாகர்.திருப்பதி தேவஸ்தான அமைப்பின் தலைவர் ஆனந்த குமார் ரெட்டி தலைமையிலான உறுப்பினர்களின் முயற்சியில் உருவான பிரமாண்ட நாயகனின் பிரம்மோஸ்தவம் என்கிற தமிழ்ப் பாடல்கள் அடங்கிய குறுந்தகட்டினைத் தமிழக ஆளுனர் கே.ரோசையா இன்று சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள திருப்பதி கோவிலில் வைத்து வெளியிட்டார்.பிரமாண்ட நாயகனின் பிரம்மோத்ஸவம் என்கிற தலைப்பில் திருப்பதி ஏழுமலையானைப் பற்றிய பாடல்கள் அடங்கிய குறுந்தகட்டினை வெளியிட்டுப் பேசிய தமிழக கவர்னர் ஆர்.ரோசையா, தமிழில் பிரம்மோத்ஸவம் பாடல்கள் அடங்கிய குறுந்தகட்டினை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.திருப்பதியில் வெகுவிமரிசையாகப் பிரம்மோத்ஸவம் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில் மிகவும் குறுகிய காலத்தில் இந்த குறுந்தகட்டினைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.தமிழில் கொண்டுவருவதென்பது இதுதான் முதல்முயற்சி என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad