புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 அக்., 2012

]

அருண்பாண்டியனுக்கு சான்ஸெல்லாம் வாங்கிக் கொடுத்தேனே.. விஜயகாந்த் உருக்கமான புலம்பல்!


தேமுதிகவைத் தொடங்கிய பின்னர் முதல் முறையாக மிகப் பெரிய அதிர்ச்சியில் உள்ளார் விஜயகாந்த். அவருடன் 50 வருடமாக நெருங்கிப் பழகிய நண்பர் சுந்தரராஜனும், நீண்ட காலம் திரையுலகில் நெருக்கமானவராக இருந்து வந்த அருண் பாண்டியனும் விஜயகாந்த்தை உதறி விட்டு அதிமுக பக்கம் போனது அவரை அதிர வைத்துள்ளதாம்.
சென்னை: அருண் பாண்டியன் ஊமை விழிகள் படத்தில் நடிக்க எத்தனை முறை என்னைப் பார்க்க அலைந்திருப்பார் தெரியுமா… அவருக்கு பல படங்களில் நடிக்க நான்தான் சான்ஸ் வாங்கிக் கொடுத்தேன். ஆனால் அவர் நன்றி மறந்து விட்டுப் போய் விட்டார். அவரது குடும்பத்தினர் நிச்சயம் அவரது செயலுக்காக வருத்தப்படுவார்கள் என்று கூறியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
இதுவரை இப்படி ஒரு அப்செட்டில் விஜயகாந்த் இருந்ததே இல்லை என்று கூறுகிறார்கள் தேமுதிகவினர்.
இந்த நிலையில் நேற்று பிற்பகலில் கட்சித் தலைமை அலுவலகத்தில் நடந்த எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் விஜயகாந்த் பேசும்போது மிகவும் உருக்கமாக சுந்தரராஜன் குறித்தும், அருண் பாண்டியன் குறித்தும் பேசினாராம்.
விஜயகாந்த் பேசும்போது, எனக்கு இந்த மைக்கேல் ராயப்பன், தமிழழகன் ஆகியோர் போனது குறித்துக் கூட கவலையே இல்லை. அதைப் பற்றி நான் கவலைப்படவே இல்லை. ஆனால் சுந்தரராஜன் போனது, அருண் பாண்டியன் போனதுதான் என்னை ரொம்பவே கவலைக்குள்ளாக்கி விட்டது.
நானும் சுந்தரராஜனும் இன்னிக்கு நேற்றா பழகி வந்தோம். நீண்ட கால நண்பர்களாக இருந்தோம். ஆனால் அதை மறந்து விட்டு அவர் போய் விட்டார். அருண் பாண்டியனை சினிமாவில் வளர்த்து விட்டு, ஒரு அடையாளம் காட்டியதே நான்தான். ஊமை விழிகள் படத்தில் நடிக்க எத்தனை முறை என்னைப் பார்க்க அலைந்திருப்பார் தெரியுமா… அதையெல்லாம் அவர் நினைத்துப் பார்த்திருக்க வேண்டாமா.. அவருக்காக எத்தனை படக் கம்பெனிகளில் நானே பேசி அவருக்கு வாய்ப்பு வாங்கித் தந்தேன் தெரியுமா…
திரையுலகில் அவருக்கு நல்ல வாய்ப்புகள் அமையவில்லை. இருந்தாலும் அவர் நல்ல நண்பராக இருந்ததால் அரசியலில் அவரை இழுத்து விட்டேன். எம்.எல்.ஏ. பதவியிலும் அமர்த்தினேன். ஆனால் அதை அவர் மறந்து விட்டார். இருந்தாலும் அவரது குடும்பத்தினர் நிச்சயம் இதை நினைத்து வருத்தம் அடைவார்கள். அந்த நம்பிக்கை எனக்கு உண்டு என்று உணர்ச்சிகரமாக பேசினாராம் விஜயகாந்த்.
சுந்தரராஜன் குறித்து அவர் கூறுகையில், அவரை சட்டசபையிலோ, வெளியிடத்திலோ யாரும் தயவு செய்து திட்டவோ, கண்ணியக்குறைவாகவோ நடக்கக் கூடாது. அவர் விரைவில் தனது தவறை உணர்வார். கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்று எம்.எல்.ஏக்களுக்கு அறிவுரை கூறினாராம்.
முன்னதாக நேற்று சட்டசபைக் கூட்டம் முடிந்து எம்.எல்.ஏக்கள் வெளியேறியபோது, சுந்தரராஜனை மடக்கி நிறுத்திய தேமுதிக எம்.எல்.ஏக்கள் பார்த்தசாரதியும், நல்லதம்பியும், கடுமையாக சாடிப் பேசினராம். அசிங்கமாகவும், ஒருமையிலும் சுந்தரராஜனைப் பேசியதால் அவர் அதிர்ச்சி அடைந்து போனாராம். இருந்தாலும் சமாளித்தபடி அங்கிருந்து அவர் கிளம்பிப் போனாராம்.

ad

ad