புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 அக்., 2012

திரு.பொன் பாலராஜன் அவர்கள் மீது அவதூறு

நேற்று சில ஊடகங்கள் வாயிலாக திரு.பொன் பாலராஜன் அவர்கள் மீது அவதூறு பூசும் வண்ணம் செய்திகளை வெளியிட்டிருந்தன. அவரது ஆதரவாளர்களும் நண்பர்களும் அபிமானிகளூம் இதற்கு எதிராக வேதனையையும் விசனத்தையும் தெரிவித்திருக்கிறார்கள். இது விஷயமாக அவரிடம் கேட்டபோது ஒரு அறிக்கையொன்று வெளியிட்டிருந்தார். அது வருமாறு:
 
எதிர்வரும் நவம்பர் மாதம் 1ம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் UPR தொடர்பான பல விடயங்கள் குறிப்பாக இலங்கை அரசின் மனித உரிமை மீறல், போர்க்குற்றம், இன அழிப்பு போன்ற விடயங்களுக்கு இலங்கை அரசு பதில் சொல்ல வேண்டிய நிலையில் உள்ளது. புலம் பெயர் அமைப்புக்கள் இந்த UPR தொடர்பான பல விடயங்களை மனித உரிமை அவைக்கு ஏற்கனவே சமர்ப்பித்துள்ளனர்.அவை மனித உரிமை அவையில் ஏற்றுக்கொள்ளப் பட்டிருப்பதை (UNHRC) UPR Stakeholders Report மூலம் அறியக் கூடியதாகவும் உள்ளது. நடைபெறவிருக்கும் UPR தொடர்பான ஐ. நா. அமர்வில் இலங்கைக்கு எதிராகப் பிரச்சாரத்தில் ஈடுபடுபவர்களாக TGTE, BTF, CTC, USTPAC, GTF போன்ற தமிழ் அமைப்புக்கள் ஜெனிவா நோக்கி இந்த வாரம் பயணமாகின்றார்கள். அப்படியான சூழ்நிலையில் புலம் பெயர் அமைப்புக்களுக்கும் அதை ஆதரிக்கும் மக்களுக்கும் ஒரு சிக்கலை உருவாக்கி விடுவது இலங்கை அரசினது (கெகலிய றம்புக்வெல) போன்றவர்களின் வேலைத் திட்டமாகும். சில மாதங்களுக்கு முன்னர் புலம் பெயர் அமைப்புக்களை வலுவிழக்கச் செய்வது அல்லது தம்வசப்படுத்துவது என்ற இரண்டு வேலைத் திட்டங்கள் தொடர்பாக இலங்கை அரசின் ஆட்கள் பலர் வெளிநாடுகளுக்கு வந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளதை அறிவோம்.நாடுகடந்த அரசாங்கத்தினையும் GTF போன்ற கட்டமைபுகளை வலுவிழக்கச் செய்கின்ற முயற்சியாகத்தான் இந்தப் போலிப் பேச்சுவார்த்தை நாடகம். அதில் என் போன்றவர்களின் பெயர்களையு இழுத்து விடவும். சிங்களம் தயாராக இருக்கின்றது.
 
புலம்பெயர் தமிழர் மீது ஒரு மனேவியல் போரை (psychological warfare) சிங்களம் முடிக்கிவிட்ட நிலையில் ஒருசில ஊடகங்களும் சில மனிதர்களும் தங்களுக்குள்ள கருத்து மோதல் கட்கு ஆதரவு தேடுமுகமாக சிங்களத்திற்கு துணை போதல், கழம் அமைத்துக் கொடுத்தல், தூபமிடல் போன்ற செயல்களில் ஈடுபடுவதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.இரண்டாவதாக நவம்பர் இரண்டாவது வாரம் பிரித்தானியா பாராளுமன்ற சர்வகட்சி கூட்டணி மற்றும் BTF இணைந்து மிக முக்கியமான மாநாடு ஒன்றினைப் போர்க்குற்றம் தொடர்பாக நடாத்தவுள்ளது. இதன் விளவு 2013ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள மனித உரிமை அவை ஒரு மிகப் பெரிய நெருக்கடியை சிங்கள அரசிற்குக் கொடுக்கும் என எதிர்பார்க்கப் படுகின்றது. இவற்றிலெல்லாம் இருந்து சிங்களம் தப்பிக் கொள்ளவும் புலம் பெயர் அமைப்புக்களை சின்னா பின்னமாக்கவும் சிங்கள அரசும் அதன் அடிவருடிகளும் செய்கின்ற சூழ்ச்சி வலையில் நம்மவர்களும் தெரிந்ததோ தெரியாமலோ பலியாகி விடுவதுடன் சிங்களம் இலகுவாக தனது இலக்கினை அடைய வழி செய்து விடுகின்றனர்
 

ad

ad