புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 அக்., 2012


ஜெனிவாவில் இலங்கையை கேள்விக்குள்ளாக்க சர்வதேச குழுக்களிடமிருந்து கடும் அழுத்தங்கள்! பிரட் அடம்ஸ்

இலங்கையின் மனித உரிமை நிலைமை மோசமடைந்து வருவது தொடர்பாக இலங்கையை கேள்விக்கு உள்ளாக்க அனைத்துலக ஆவர்த்தன பரிசீலனையை அரசாங்கங்கள் ஓர் அரங்கமாக பயன்படுத்த வேண்டுமென மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்ற
சர்வதேச சிவில் சமூக குழுக்களிடமிருந்து கடும் அழுத்தங்கள் வருகின்றன என்று அவ் அமைப்பின் ஆசிய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் கூறினார்.
Brad_Adams-211
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை அரசாங்கம் எவ்வளவு தூரம் நிறைவேற்றியுள்ளது என்பதையும் மனித உரிமைகளை மேம்படுத்துவதிலும் பாதுகாப்பதிலும் இலங்கை என்ன சாதித்துள்ளது என்பதையும் பொறுத்தே ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இடம்பெறவுள்ள இலங்கை பற்றிய அனைத்துலக ஆவர்த்தன பரிசீலனையை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் சிபாரிசுகள் அமையும் என நம்புவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்தது.
நாளை முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவைவையின் இலங்கை பற்றிய அனைத்துலக ஆவர்த்தன பரிசீலனைக்கு இலங்கை அரசாங்கம், சிவில் சமூக குழுக்கள் மற்றும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு ஆகியன தங்களது அறிக்கைகளை அனுப்பியுள்ளன.
இந்த அறிக்கைகளை இந்தியா, பெனின், ஸ்பெய்ன் ஆகிய நாடுகள் ஆராய்ந்து தங்களது பரிந்துரைகளை மேற்கொள்ளும். இந்த மூன்று நாடுகளும் எழுமாற்று முறையில் தெரிவு செய்யப்பட்டவை.
துரதிர்ஷ்டவசமாக இந்த மூன்று நாடுகளும் இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் வாக்களித்தவையாகின்றன.
மனித உரிமைகளுக்கென ஜனாதிபதியின் விசேட தூதுவரான அமைச்சர் மஹிந்த சமரசிங்க, ஜெனீவா செல்லும் தூதுக்குழுவுக்கு தலைமை தாங்குவார்.
இலங்கையில் பல்வேறு பொறுப்புகள் இருப்பதனால் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அங்கு போகமாட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.

ad

ad