புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 அக்., 2012


பேச்சுவார்த்தைக்கு இந்தியா மத்தியஸ்தம் வகிக்காது! இந்தியா உத்தரவாதமளித்தால் தெரிவுக்குழுவில் பங்கேற்கத் தயார்! த.தே.கூட்டமைப்பு
இலங்கை அரசாங்கத்துக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் இந்தியா மத்தியஸ்தம் வகிக்காது என்று தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவின் உயர் அதிகாரிகள் சிலர் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.
அரசாங்கமும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் பொது இணக்கப்பாடு ஒன்றை காண்பதில் தொடர்ந்தும் தாமத நிலைமை காணப்படுகிறது.
இது தொடர்பில் இந்திய அரசாங்கம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு கண்டனம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.
அண்மையில் அவர் இந்தியா சென்றிருந்த போது, இந்திய பிரதமர் மன்மோகன் சிங், அரசியல் தீர்வு ஒன்றை காண்பது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அரசாங்கம் அசமந்த நிலையில் காணப்படுகின்றமை தொடர்பில் தமது கவலையை வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
எவ்வாறாயினும் இந்த சந்திப்பின் போது, கூட்டமைப்புக்கும், அரசாங்கத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தம் வகிக்கப் போவதில்லை. அத்துடன் இரண்டு தரப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தும் களத்தை ஏற்படுத்த மாத்திரம் உதவி செய்வதாகவும் பிரதமர் மன்மோகன் சிங் மகிந்த ராஜபக்சவிடம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இறுதித் தீர்வுக்கு இந்தியா உத்தரவாதம் அளித்தால் தெரிவுக்குழுவில் பங்கேற்கத் தயார்!
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலம் ஒரு உடன்பாடு எட்டப்படும் என்று இந்திய அரசாங்கம் உத்தரவாதம் அளிக்குமேயானால், உத்தேச நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்கும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலைமைகள் தொடர்பாக இந்தியத் தூதரகத்துக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும், இலங்கை வந்த இந்திய நாடாளுமன்றக் குழுவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே விளக்கிக் கூறியுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்துமேயானால்இ நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலம் இறுதியாக ஒரு உடன்பாடு எட்டப்படும் என்று அவர்கள் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
இதன் விளைவு பற்றிய ஒரு உத்தரவாதம் எமக்குத் தேவை.
இந்திய அரசாங்கம்  இலங்கை அரசாங்கத்தையும், அரசியல் கட்சிகளையும் அரசியல் தீர்வு ஒன்றுக்கு இணங்க வைக்க முடியும் என்றால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுக்களில் பங்கேற்கும்.
கடந்த காலங்களில் அரசியல் தீர்வு குறித்த திட்டங்களை பல குழுக்களின் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்ட போதும் அவை கருத்தில் எடுக்கப்படவில்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

ad

ad