புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 அக்., 2012


லிகளின் "பிஎப்எல்டி" என்ற தனிநாடு கோரும் அமைப்பு செயல்படுகிறது:- தமிழக அரசு அறிவிப்பு
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான் தடை சரிதான் என்பதற்கான ஆவணங்களை விசாரணை தீர்ப்பாணையத்தின் முன்பு தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை இந்தியாவில் தடை செய்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு சரியானது என்பதற்கான ஆதாரங்களாக 2 வால்யூம் ஆவணங்களை இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் தீர்ப்பாயத்திடம் தமிழக அரசு சனிக்கிழமை தாக்கல் செய்தது.
கியூ பிராஞ்ச் பொலிஸ் அதிகாரி சம்பத்குமார் இந்த ஆவணங்களை தாக்கல் செய்தார்.
இந்த ஆவணங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கு எதிரான வழக்குகள், அந்த அமைப்புடன் தொடர்புடையோரின் விவரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.
மேலும் தமிழீழத்தையும் தமிழகத்தையும் இணைத்து அகன்ற தமிழ்நாடு அமைப்பதற்காக விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி என்ற அமைப்பு தமிழகத்தில் செயல்படுவதாகவும் தமிழக அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, தமிழகத்தில், விடுதலைப் புலிகள் இயக்கம் வலுவடைந்து வருகிறதா? என்ற கேள்விக்குப் பதிலளித்த இராணுவ அமைச்சர் அந்தோனி, மத்திய அரசு, உன்னிப்பாகக் கவனித்து வருகிறது என்றார்.
2ம் இணைப்பு
தமிழீழ தனிநாட்டையும் தமிழகத்தையும் இணைத்து ஒரு பரந்த  தமிழ்நாட்டை தோற்றுவிக்கவிடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி என்ற அமைப்பு தமிழகத்தில் செயல்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை குறித்த  ஆவணங்களை விசாரணை தீர்ப்பாணையத்தின் முன்பு தமிழக அரசு கடந்த வாரம் தாக்கல் செய்திருந்தது.
குறித்த அறிக்கையில் விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி அமைப்பு பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை இந்தியாவில் தடை செய்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு சரியானது என்பதற்கான ஆதாரங்களாக 2 தொகுதி ஆவணங்களை இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் தீர்ப்பாயத்திடம் தமிழக அரசு கடந்த சனிக்கிழமை தாக்கல் செய்துள்ளது.
கியூ பிரிவு பொலிஸ் அதிகாரி சம்பத்குமார் இந்த ஆவணங்களை தாக்கல் செய்தார்.
ஆவணங்களில் உள்ளபடி : தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கு எதிரான வழக்குகள், அந்த அமைப்புடன் தொடர்புடையோரின் விவரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

ad

ad