புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 அக்., 2012


கிழக்கு மாகாண சபையின் கூட்டமைப்பு உறுப்பினர் ஜனாவின் வீட்டிலிருந்து குண்டு மீட்பு


தமிழ் தேசியக்கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரனின் (ஜனா) இல்லத்திலிருந்து இரண்டு இக்கைக்குண்டுகள் மீட்கப்பட்டதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தார்.


பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றையடுத்து நேற்று அதிகாலை 3.00 மணியளவில் செட்டிப்பாளையத்திலுள்ள மேற்படி உறுப்பினரின் இல்லத்திலிருந்து குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினரால் மீட்கப்பட்டது.

இக்குண்டுகள் பொலித்தீன் பையொன்றினுள் இடப்பட்ட நிலையில் மாகாண சபை உறுப்பினரின் வீட்டு வளாக மதிலோரத்தில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்விடயம் தொடர்பாக உறுப்பினரின் மைத்துனர் பொலிஸாரினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

கைக்குண்டு மீட்டெடுக்கப்படும் வேளை மாகாண சபை உறுப்பினர் வீட்டில் இருக்கவில்லை. அவர் கிழக்கு மாகாண சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக திருகோணமலை சென்றிருந்ததாக பா.அரியநேத்திரன் எம்.பி தெரிவித்தார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


ad

ad