புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 நவ., 2012


தாக்கியதாக புகார்!  பிரபல கவர்ச்சி நடிகையை தேடுகிறது போலீஸ்!
 

சென்னையை அடுத்த ஈஞ்சம்பாக்கத்தில் சினிமா தியேட்டரில் கார் நிறுத்துவதில் 2 தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் நடிகை புவனேஸ்வரி மற்றும் ஆதரவாளர்கள் தியேட்டரை சூறையாடி, போலீசாரை தாக்கியதாக புகார் கூறப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த ஈஞ்சம்பாக்கத்தில் டிரைவ்-இன் தியேட்டர் உள்ளது. இந்த தியேட்டரில் நடிகர் விஜய் நடித்த துப்பாக்கி படம் திரையிடப்பட்டு உள்ளது. 
இந்த தியேட்டருக்கு நடிகை புவனேஸ்வரி, தனது நண்பர் தாமோதரன் மற்றும் சிலருடன் கடந்த 25.11.2012 அன்று படம் பார்க்க காரில் வந்திருந்தார்.

தாம்பரம் அருகே உள்ள சேலையூரைச் சேர்ந்த குமார் (வயது 28) என்பவரும் தியேட்டரில் காரில் அமர்ந்தபடி படம் பார்க்கச் சென்றார். 
தியேட்டருக்குள் கார்கள் ஒன்றன்பின் ஒன்றாகத்தான் செல்ல முடியும். குமார் கார் சென்றபோது பின்னால் மற்றொரு காரில் நடிகை புவனேஸ்வரி வந்தார். கார் செல்வதற்கு காலதாமதம் ஏற்பட்டதால், புவனேஸ்வரி காரின் டிரைவர் ஹாரன் அடித்தார். அப்போது, குமாரின் கார் மீது புவனேஸ்வரியின் கார்மோதியதாக கூறப்படுகிறது.
உடனே காரில் இருந்து குமார் இறங்கி வந்து இதை தட்டிக்கேட்டார். அப்போது புவனேஸ்வரியின் காரில் இருந்து இறங்கிய தாமோதரன், அவரை அடித்ததாக தெரிகிறது. மேலும் நடிகை புவனேஸ்வரியும் இறங்கிவந்து குமாரிடம் வாக்குவாதம் செய்தார்.

இதை கண்ட தியேட்டர் ஊழியர் செல்வராஜ் தடுக்க முயன்றார். அவருக்கும் அடி விழுந்தது. இது குறித்து நீலாங்கரை போலீசுக்கு தகவல் தரப்பட்டது.
சம்பவ இடத்திற்கு, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, ஜீப் டிரைவர் பாஸ்கர் ஆகியோர் விரைந்து வந்து தகராறு செய்த நடிகை புவனேஸ்வரியையும், அவருடன் வந்தவரையும் தட்டிக்கேட்டனர்.
அதற்குள் ஒரு மர்ம கும்பல் தியேட்டருக்கு வந்தது. போலீசாரை தாக்கிய அந்த கும்பல், தியேட்டரில் இருந்த பூந்தொட்டிகள், டிஜிட்டல் பேனர்கள் ஆகியவற்றை அடித்து நொறுக்கிவிட்டு தப்பிஓடி விட்டது. இதுகுறித்து நீலாங்கரை போலீசில் குமார் புகார் செய்தார். புவனேஸ்வரியின் ஆதரவாளர்கள் தாக்கியதாக புகாரில் கூறப்பட்டுள்ளது.
அதன்பேரில் போலீசார், கொலை முயற்சி, பணி செய்ய விடாமல் தடுத்தல் மற்றும் பொதுசொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, நடிகை புவனேஸ்வரி, தாமோதரன் உள்ளிட்டவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

ad

ad