புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஜன., 2013


ரிசானாவின் வீட்டு நிர்மாணப்பிற்காக சவூதி இளவரசி ஹிஸ்புல்லாவிடம் 10 லட்சம் கையளிப்பு


சவூதி அரேபிய நாட்டின் இளவரசி ஆதிலாவின் இணைப்புச் செயலாளரும் விசேட ஆலோசகருமான சட்டத்தரணி யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அர்ராஸித் மட்டக்களப்பு, காத்தான்குடிக்கு விஜயம் செய்தார். 


அங்கு விஜயம் செய்த அவர் சவூதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட மர்ஹூமா றிசானா நபீக்கின் குடும்ப நிலையை கருத்திற்கொண்டு அவரின் வீட்டு நிர்மாணப்பணிக்காக 10 இலட்சம் ரூபாவை சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்விடம் அவரின் பிராந்திய காரியாலயத்தில் நேற்று சனிக்கிழமை இரவு உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தார். 

பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் அழைப்பின் பேரிலேயே சட்டத்தரணி யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அர்ராஸித் இலங்கைக்கு விஜயம் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியலாளர் எம்.எப்.எம்.ஷிப்லி பாரூக் மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஜனாதிபதியின் ஆலோசகர் மௌலவி மசூத் அல்-மனார் அரபுக் கல்லூரி பொதுச் செயலாளர் மும்தாஸ், காத்தான்கடி நகரசபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் உட்படபலரும் கலந்து கொண்டனர். 

ad

ad