புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஜன., 2013


பயணி ஒருவரால் சென்னை விமான நிலையத்தில் கைவிடப்பட்ட பயணப் பொதியிலிருந்து ஒரு கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கக் கட்டிகள் மீட்கப்பட்டுள்ளன.
இலங்கையிலிருந்து சென்ற பயணி ஒருவரே தனது பயணப் பொதியை சுங்க அதிகாரிகளுக்குப் பயந்து விட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
நேற்று கொழும்பில் இருந்து சென்ற பயணிகள் விமானம் பிற்பகல் சென்னை சென்றது. விமான நிலைய சுங்க அதிகாரிகள் பயணிகளின் உடமைகளை சோதனை செய்தனர். அப்போது, கன்வயர் பெல்ட்டில் கவனிப்பாரற்று ஒரு சூட்கேஸ் நீண்ட நேரமாக இருந்தது.
அதில் வெடிகுண்டு இருக்கலாமோ என்ற அச்சம் எழுந்ததையடுத்து, விமான நிலைய வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் பெட்டியை சோதனை செய்தனர்.
பயணப் பொதியை சுங்க அதிகாரிகள் திறந்து பார்த்தபோது, அதற்குள் ஏராளமான தங்கத் தகடுகள் இருப்பது தெரியவந்தது. மொத்தம் 1 கிலோ 700 கிராம் தங்க கட்டிகள் இருந்தன.
சூட்கேசில் கட்டப்பட்டிருந்த டேக் கார்டை வைத்து ஆய்வு செய்த போது, அதை கொண்டு வந்த பயணி கொழும்பு நகரைச் சேர்ந்த முஸ்தபா என தெரியவந்துள்ளது. கடத்தல்காரர்கள் சாதாரணமாக 2ம் வகுப்பில் வருவார்கள். ஆனால், இந்த பயணி எக்சிக்யூட்டிவ் கிளாஸ் எனப்படும் முதல் வகுப்பில் வந்துள்ளார்.
இவர் தங்கத்தை கடத்தி வரும்போது, சுங்க அதிகாரிகளின் கெடுபிடியை கண்டு சூட்கேஸை விட்டுச் சென்றுள்ளார். அவரை பிடிக்க அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக சென்னையில் உள்ள இலங்கை தூதரக அலுவலகத்தில் குறித்த தகவல்களை கொடுத்துள்ளனர்.

ad

ad