புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஜன., 2013

விஸ்வரூபம் படத்தின் கதை
கதை அமெரிக்காவில் தொடங்குகிறது. நியூயார்க்கில் கமலஹாசன் நடன ஆசிரியராக பணி செய்கிறார். அவர் மனைவி பூஜாகுமார். இவருக்கு கமலை விட வயது ரொம்ப குறைவு. அமெரிக்காவில் பி.எச்.டி. படிப்பதற்காக கமலை மணந்து
வேண்டா வெறுப்பாக அவருடன் வசிக்கிறார். இதனால் கமலை கழற்றி விட முயற்சிக்கிறார்.

கமலுக்கும் நடனம் படிக்கும் ஆண்ட்ரியாவுக்கும் காதல் இருப்பதாக பூஜா சந்தேகிக்கிறார். அதை கண்டுபிடிக்க தனியார் துப்பறியும் நிபுணரை நியமிக்கிறார். அவர் விசாரணையில் கமல் ஒரு முஸ்லிம் என்ற விஷயம் வெளிப்படுகிறது. துப்பறிந்தவர் திடீரென சாகடிக்கப்படுகிறார்.

அப்போது கமலும், பூஜா குமாரும் வில்லன்களிடம் சிக்குகின்றனர். உடனே அதுவரை பெண் நளினத்தில் இருந்த கமல் விஸ்வரூபம் எடுத்து அத்தனை பேரையும் அடித்து நொறுக்குகிறார். அப்பாவி கணவனின் அதிரடியால் பூஜா குமார் ஆச்சரியமாகிறார்.

பிறகு கமல் யார் என்ற பிளாஷ்பேக்.

இந்தியாவின் உளவு அமைப்பான 'ரா' அதிகாரி கமல். முஸ்லிம் ஆக வருகிறார். தீவிரவாதி போர்வையில் ஆப்கானிஸ்தானில் நுழைகிறார். அங்கு தலிபான்கள் கையில் சிக்குகிறார். தமிழ் பேசும் கமலை பார்த்துவிட்டு அவரிடம் தலிபான் தலைவர் உமர் தமிழிலேயே பேசுகிறார். கோவை, மதுரையில் இரண்டு ஆண்டுகள் இருந்ததாக உமர் சொல்கிறார்.

புறாக்களை பயன்படுத்தி அமெரிக்காவில் அணுகுண்டு வைத்து அழிக்க தலிபான்கள் திட்டமிடுகின்றனர். அப்போது கமல் தனது தீவிரவாத வேடத்தை கலைக்கிறார். அமெரிக்க உளவு அமைப்புகளுடன் கைகோர்த்து தீவிரவாதிகள் சதியை எப்படி முறியடிக்கிறார் என்பது மீதி கதை...

ad

ad