புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜன., 2013



சொத்துக்காக தாயை கொன்ற மகன்கள்
திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள பேரூரை சேர்ந்தவர் வீரன் மனைவி பூவாயி (வயது 80). இவர்களுக்கு 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் வீரன் இறந்த பிறகு பூவாயி அதே ஊரில் குடும்பத்துடன் வசிக்கும் தனது
மகள் பிச்சாயி வீட்டில் தங்கியிருந்தார்.
கடந்த 28.12.2011 அன்று பூவாயி வீட்டில் இறந்து கிடப்பதாக முசிறி போலீசாருக்கு கிராம நிர்வாக அலுவலர் புகார் செய்
தார். புகாரின்பேரில் சம்பவ இடம் சென்ற போலீசார் பூவாயி உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சந்தேக மரணம் என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். 
இதற்கிடையில் பிரேத பரிசோதனையின் போது பூவாயி கழுத்து இறுக்கப்பட்ட அடையாளம் இருந்தது. அந்த பகுதி மட்டும் ரசாயன பரிசோதனைக்கு அனுப்பட்டது. அதில் பூவாயியின் கழுத்து சிறிய கயிறால் இறுக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்தது. இதை வைத்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர். 
இதுதொடர்பாக விசாரணை நடத்தியபோது இந்த கொலையை பூவாயின் மகன்கள் காராளன் (62), மதியழகன் (52) ஆகியோர் செய்தது தெரிய வந்தது. மேலும் சொத்து பிரச்சினை காரணமாக இந்த கொலை நடந்துள்ளது விசாரணையில் தெரிந்தது. 
பூவாயி இறந்து 1 வருடத்திற்கு பிறகு அவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அம்பலமாகியுள்ளது. முசிறி டி.எஸ்.பி. தங்கவேல் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் ரவிச்சக்கரவர்த்தி பூவாயியின் காராளன் மற்றும் மதியழகனை கைது செய்தார். போலீசாரிடம் அவர்கள் வாக்கு மூலம் அளித்தனர். 
அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- சம்பவத்தன்று எனது அக்கா பிச்சாயி வெளியூர் சென்ற போது அதிகாலை 2 மணிக்கு வீட்டிற்கு சென்ற நாங்கள் தூங்கிகொண்டு இருந்த எனது அம்மாவை கொலை செய்தோம். மதியழகன் சிறு கயிறால் கழுத்தை இறுக்கினான். நான் கால்களை பிடித்துக் கொண்டேன். அம்மா இறந்து போனதும் அங்கிருந்து நைசாக சென்று விட்டோம். யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க அம்மாவின் இறுதி சடங்கை ஊரார் முன்னிலையில் அறங்கேற்றினோம். 
தற்போது பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் சிக்கி கொண்டோம் என தெரிவித்துள்ளனர். கைதான 2 பேரையும் முசிறி கோர்ட்டில் ஆஜர் படுத்தி 15 நாள் சிறையில் அடைத்தனர்.

ad

ad