புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஜன., 2013



மகரஜோதி : சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

மகரஜோதியைக் காண்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதிங்கள்கிழமை மாலை பொன்னம்பல மேட்டில் மூன்று முறை ஜோதி காட்சியளிக்கும். அப்போது பக்தர்கள் ஜோதியை தரிசித்தவாறு எழுப்பும் சரண கோஷம் விண்ணை முட்டும்.

சபரிமலை ஐயப்பன் பரிமலையில் குவிந்துள்ளனர்.

கோயிலில் 14-ம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறும். அதை முன்னிட்டு கோவில் சன்னிதானம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

ஜோதியைக் காண்பதற்காக தமிழகம், ஆந்திரம், கர்நாடகம் என பல்வேறு மாநிலங்களிலிருந்து பக்தர்கள் இரு தினங்களுக்கு முன்பிருந்தே சபரிமலையில் குவிந்துள்ளனர். பக்தர்கள் கூட்ட நெரிசலையடுத்து பாதுகாப்புப் பணியில் ஏராளமான போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க பம்பைக்கு 10 கிலோ மீட்டர் தொலைவிலேயே தனியார் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.

கேரள அரசு போக்குவரத்து கழகங்கள் மட்டும் உள்ளே செல்ல அனுமதி அளிக்கப்பட்டன. மகரஜோதியை முன்னிட்டு 18-ம் படி வழியாக பக்தர்களைத் தரிசனத்துக்கு அனுப்புவது சிறிது நேரம் நிறுத்தப்படும்.

பக்தர்கள் ஜோதியைத் தரிசிக்க வசதியாக புல்மேடு பகுதியிலும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆம்புலன்ஸ் வண்டிகள், மருத்துவ முதல் உதவி போன்ற வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

ஐயப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரணம் திங்கள்கிழமை மாலை 6.25 மணிக்கு சுவாமி சன்னதியை வந்தடையும். அதைத்தொடர்ந்து ஐயப்பனுக்கு திருவாபரணம் அணிவிக்கப்படும். தீபாராதனைக்குப் பின்னர் பொன்னம்பல மேட்டில் 3 முறை ஜோதிகாட்சி தரும்.

காணிக்கை மற்றும் பிரசாத விற்பனை மூலம் சபரிமலை ஐயப்பன் வருமானம் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு காலத்தில் ஜனவரி 11ம் தேதி வரை ரூ.160 கோடியை எட்டியுள்ளது என தேவஸ்தான அதிகாரி தெரிவித்தார்.

ad

ad