புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஜன., 2013

பிரெஞ்சு பிணையக் கைதியை விடுவிக்கும் முயற்சி தோல்வி
பிரான்சு ராணுவம் தன்னுடைய அதிகாரி ஒருவரைப் பிணையக் கைதியாகப் பிடித்து வைத்திருந்த சோமாலியருடன் போராடி தோல்வியடைந்தது.
பிணையக் கைதியான டெனிஸ் அலெக்ஸ் இந்தப் போராட்டத்தில் கொல்லப்பட்டதாக பிரெஞ்சு பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜீன் யேவ்ஸ் லீ டிரியான் தெரிவித்தார். இத்துறையின் செய்தித் தொடர்பாளர் ஜெனரல் மார்ட்டின் க்ளோட்ஸ் இந்தப் போராட்டம் பற்றி விளக்க மறுத்துவிட்டார்.
ஆனால், சோமாலியாவில் உள்ள அல் ஷபாப் இயக்கத்தினர் டெனிஸ் அலெக்ஸ் சாகவில்லை என்றும் உயிரோடு பிடித்து வைத்திருப்பதாகவும் தெரிவித்தனர். இன்னும் இரண்டு நாட்களில் அவருடைய முடிவு தெரிவிக்கப்படும் என்றனர்.
மோதல் நடந்த புலோமாரெர் நகரத்து மக்கள் வெடிகுண்டுச் சத்தமும் துப்பாக்கி சுடும் சத்தமும் காதைப் பிளந்தது என்றனர். அல் ஷமாப் இயக்கத்தினர், பிரெஞ்சு ராணுவம் ஹெலிகப்டரில் தரையிறங்கிய பின்பு தான் தாங்கள் அவர்களை எதிர்த்ததாக கூறினர்.
ஐந்து ஹெலிகப்டர்களில் பிரெஞ்சு ராணுவ வீரர்கள் வந்ததாக அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூறினார். இந்த மோதல் போராட்டத்தில் இறந்தவர் எண்ணிக்கையை இருதரப்பினரும் வெவ்வேறாகக் கூறுகின்றனர்.
வடக்கு மாலியில் ஃபிரெஞ்சு ராணுவம் புகுந்து அங்கு இருந்த இசுலாமிய தீவிரவாதிகளை (AQIM) விரட்டியதற்கு பதிலடியாக சோமாலியாவில் பிரெஞ்சுக்காரர்களை அல் ஷபாப் இயக்கத்தினர் விரட்டியடித்தனர் என்று கூறப்படுகிறது. இங்கு பிரெஞ்சுப் படையினரின் தோல்வி உறுதியாகிவிட்டது.
அலெக்ஸ், சோமாலியாவின் அரசு ராணுவத்துக்குப் பயிற்சியளிப்பதற்காக அங்கு தங்கியிருந்தார். அந்த ராணுவம் அக்கிம் தீவிரவாதிகளை விரட்ட பிரெஞ்சு அதிகாரிகளிடம் பயிற்சியெடுத்தது. அலெக்ஸையும் அவரது நண்பரையும் கடந்த 2009ம் ஆண்டு, யூலை 14 திகதி அன்று கடத்தினர். ஆனால் அவரது நண்பர் தப்பித்து விட்டார், அலெக்ஸ் சிக்கிக் கொண்டார்.

ad

ad