புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜன., 2013


சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி தோன்றியது
சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் மண்டல பூஜையும், மகர விளக்கு பூஜையும் சிறப்பிடம் பெற்றது. கடந்த மாதம் 26-ந்தேதி மண்டல பூஜை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கடந்த 30-ந்தேதி மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டது. 31-ந்தேதி முதல் அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. சபரிமலை கோவில் நடை திறந்தது முதலே பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
 
இன்று மகர விளக்கு பூஜை நடைபெற்றது. இதையொட்டி சபரி மலையில் கட்டுக்கடங்காத அளவுக்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு அய்யப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டது. இதற்கான திருவாபரணங்கள் இருக்கும் பெட்டி பந்தளத்தில் இருந்து சபரிமலைக்கு நேற்று ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
 
திருவாபரண ஊர்வலம் சபரிமலை சன்னிதானத்தை இன்று காலை 7 மணிக்கு வந்தடைந்தது. அங்கு திருவாபரணங்கள் கோவில் மேல்சாந்திகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் அதனை கருவறைக்கு கொண்டு சென்று அய்யப்பனுக்கு அணிவித்தனர்.
 
அதைத் தொடர்ந்து மாலை 6.30 மணி அளவில் சபரிமலை அய்யப்பனுக்கு தீபாராதனை நடத்தப்பட்டது. அதே நேரத்தில் பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி தெரிந்தது. அங்கு தரிசனத்திற்காக கூடியிருந்த பக்தர்கள் சாமியே... சரணம் அய்யப்பா... என மகர ஜோதியை தரிசனம் செய்தனர்.
 
மகர ஜோதியை முன்னிட்டு பம்பையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ad

ad