புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜன., 2013


சிங்கப்பூரின் முதல் பெண் சபாநாயகர் 

சிங்கப்பூரின் முதல் பெண் சபாநாயகராக இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர் பதவியேற்றுள்ளார்.

இந்திய வம்சாவழியைச் சேர்ந்த ஹலிமா யாகோப் என்ற பெண் சிங்கப்பூர் நாடாளுமன்றத்தின் முதல் பெண் சபாநாயகராகி சரித்திரம் படைத்துள்ளார். இவர் ஏற்கனவே சபாநாயகராக இருந்த மைகேல் பால்மர் என்பவருக்கு பதிலாக பொறுப்பேற்றுள்ளார். மைகேல் பால்மர் திருமணத்திற்கு பிந்தைய முறைகேடான உறவு சர்ச்சைகளால் சபாநாயகர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

ad

ad