புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 பிப்., 2013


இலங்கையில் பொதுமக்கள் மீதான அச்சுறுத்தல் தொடர்கிறது; ஐரோப்பிய ஒன்றியம் குற்றச்சாட்டு
இலங்கையில் தொடர்ந்தும் பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்களும் அச்சுறுத்தப்படும் நிலை தொடர்கிறது என ஐரோப்பிய ஒன்றியம் குற்றஞ்சாட்டியுள்ளது.
 
இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்ற உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன மீளாய்வு விசாரணைகள் அவசியம் என ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் தெற்காசிய பிராந்திய தலைவர் ஜீன் லமட்பேர்ட் கோரிக்கை விடுத்துள்ளார்
 
மனித உரிமை காவலர்களுக்கு உயிரச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு அதிகாரத்தில் உள்ளவர்களின் ஊக்கமும் காரணமாக அமைந்துள்ளது.
 
அத்துடன் போரினால் பாதிக்கப்பட்ட இடங்களில் தொழில்வாய்ப்புக்களையும் சமூக வேலைத்திட்டங்களையும் அரசாங்கம் செயற்படுத்தி வருவது வரவேற்கக்கூடியது. எனினும் தமிழ் மக்களுக்கு முன்னால் இன்னும் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இறுதிப்போர் தொடர்பில் இலங்கை இராணுவம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதைப்பற்றி ஐரோப்பிய நாடாளுமன்றம் விசேடமாக விவாதிக்கவில்லை.
 
ஆனால் பொலிஸ் படை இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்படவேண்டும் என்ற கருத்தை மாத்திரம் ஐரோப்பிய நாடாளுமன்றம் கவனத்தில் கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad