புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 பிப்., 2013


அமைச்சர் டக்ளஸினால் பிற்போடப்பட்ட அச்சுவேலி கைத்தொழிற்பேட்டை அடிக்கல் நாட்டும் நிகழ்வு திட்டமிட்டபடி நடைபெற்றது
பிற்போடப்பட்டதாக அறிவிக்கப்பட்ட அச்சுவேலி கைத்தொழிற்பேட்டைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு திட்டமிட்டபடி இன்று நடைபெற்றது. இந்திய தூதுவர் ஆசோக் கே. கந்தா கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைததார்.


இந்திய அரசின் நன்கொடை நிதியில்  அச்சுவேலி கைத்தொழிற்பேட்டையினை நிர்மாணம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அமைச்சு அச்சுவேலி கைத்தொழில் பேட்டைக்கான அடிக்கல்லை நாட்டும் நிகழ்வினை ஏற்பாடு செய்து இருந்தது.

எனினும் இன்றைய நிகழ்வுகளில் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அமைச்சர் கலந்து கொள்ள மாட்டார் எனவும் அதன்படி அடிக்கல் நாட்டும் வைபவம் வேறு ஒரு நாளுக்கு மாற்றப்படும் என அமைச்சின் செயலாளரினால் அறிவிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு அறிவிக்கப்பட்டிருந்த போதும் திட்டமிட்டபடி இன்று நிகழ்வுகள் அனைத்தும் இடம்பெற்றன.

இதேவேளை அச்சுவேலி கைத்தொழிற்பேட்டை உட்கட்டமைப்பு தொடர்பாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் மற்றும் ஒப்பந்தகாரர்களுக்கிடையிலான ஒப்பந்தக் கைச்சாத்துக்கள் இந்திய தூதுவர் அசோக் கே.காந்தா, வடமாகாண ஆளுநர்  ஜி.ஏ சந்திரசிறி அவர்களின் முன்னிலையில் இந்திய துணைத் தூதரகத்தில் இன்று கைச்சாத்திடப்பட்டன.

அச்சுவேலி கைத்தொழிற்பேட்டையின் முதன்னிலை புனரமைப்பானது 220 மில்லியன் ரூபாவில் இந்திய அரசின் நிதியுதவியுடன் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதன்படி இங்கு உட்புறச்சாலைகள், நீர்வழங்கல் அமைப்பு, சுத்திகரிப்பு ஆலை, மின்சாரம், கழிவுநீர் மற்றும் கழிவகற்றல் முறைமை உள்ளிட்ட கைத்தொழிற்பேட்டைக்குரிய அனைத்து உட்கட்டமைப்புக்களையும் சேர்த்து 6 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.

இந்த நிகழ்வுகளில் இந்திய துணைத் தூதுவர் மகாலிங்கம், தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.








 

ad

ad