புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 மார்., 2013


1 கோடி மாணவர்கள் உண்ணாவிரதம்: 20ம் திகதி தமிழ் நாடு பொங்கி எழும் 
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மாணத்தை, இந்தியா ஆதரரிக்கவேண்டும் என்றுகூறி சும்மார் 1 கோடி மாணவர்கள் வரும் 20ம் திகதி அடையாள உண்ணாவிரதத்தில் ஈடுபடவுள்ளார்கள். இதனையடுத்து
இந்திய மத்திய அரசு கதிகலங்கிப்போயுள்ளது என அறியப்படுகிறது. தமிழ் நாட்டில் தற்போது எழுந்துள்ள மாணவர்களின் எழுச்சியை ஒருவேளை கட்டுப்படுத்த முடியாமல் போகலாம் என்று காங்கிரஸ் அரசு கருதுகிறது. இது தொடர்பாக ஆராய மத்திய புலனாய்வுத் துறையினர் பலர் தமிழ் நாட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்கள் என டெல்லித் தகவல்கள் மேலும் தெரிவிக்கிறது. தேசிய தலைவரது இளையமகனே இப் போராட்டத்தை வழிநடத்துகிறார் என்ற எண்ணவெளிப்பாடுகளும் தோன்றியுள்ளது.

தமிழீழ தேசிய தலைவரது இளைய மகன் பால்ச்சந்திரன் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்ட காட்சிகளைப் பார்வையுற்ற, தமிழக மாணவர்கள் வெகுண்டு எழுந்து போராட்டங்களை நடத்திவருகிறார்கள். அவர்களின் உணர்வலைகள் தமிழகம் எங்கும் எதிரொலிக்கும் இவ்வேளையில், அனைத்து பல்கலைக் கழகங்களையும் மூடி விடுதிகளையும் மூடிவிடுமாறு மத்திய அரசு,செல்வி ஜயலலிதாவுக்கு அறிவுரை வழங்கியுள்ளது என நியூ டெல்லி TV தகவல் வெளியிட்டுள்ளது. இருப்பினும் வரும் 20ம் திகதி மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் குறித்தபடி நடக்கும் என்று மாணவர் அமைப்புகள் தெரிவித்துள்ளார்கள். 

மாணவர்களின் எழுச்சி பெரும் அதிர்வலைகளைத் தோற்றுவித்துள்ள இந் நேரத்தில், சில அரசியல் கட்சிகள் அமெரிக்க பிரேரணையை எரித்தும் வருகிறார்கள். இவை தமிழர்கள் மத்தியில் சில குழப்பங்களைத் தோற்றுவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.


ad

ad