புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 மார்., 2013


ஜெனீவா தீர்மானம்!- திமுக தலைவர் கருணாநிதியை காங்கிரஸ் மத்திய அமைச்சர்கள் சந்தித்தனர்
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து விலகப் போவதாக எச்சரிக்கை விடுத்த திமுக தலைவர் கருணாநிதியை, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர்
ஏ.கே.அந்தோணி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் ஆகியோர் இன்று மாலை சந்தித்தனர்.
இலங்கைத் தமிழர் விவகாரத்தில், சாதகமான முடிவை மத்திய அரசு எடுக்காவிட்டால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து விலகப் போவதாக திமுக தலைவர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்திருந்தார்.
மேலும் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தில், இந்தியா திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் அவரை சமாதானப்படுத்தும் வகையில், இது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சூழலில் இந்த சந்திப்பு நடைபெறுவது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதேவேளை, விமான நிலையத்தில் அவர்களுக்கு மதிமுகவினர் கருப்புக் கொடி காட்ட முயற்சி செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிசார் கறுப்பு கொடி காட்ட முயன்றவர்களை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ad

ad