புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 மார்., 2013


மத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேற தி.மு.க., முடிவு? வெளியிலிருந்து ஆதரவளிக்கவும் திட்டம்
மத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேறி, மத்திய அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவளிக்க தி.மு.க., முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐ.நா., மனித உரிமை ஆணையத்தில், இலங்கை அரசுக்கு எதிராக, அமெரிக்கா தீர்மானம் கொண்டு வரவுள்ளது. இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை, அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. இதே கோரிக்கையை வலியுறுத்தி பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு தி.மு.க ., தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியிருந்தார். ஆனால் அவரது கோரிக்கையை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. அவரை சமாதானப்படுத்துவதற்கும், டில்லியிலிருந்து தூதர் யாரும் வரவில்லை. இதனால், கருணாநிதி கடும் அதிருப்தி அடைந்துள்ளார்.

இந்நிலையில், அறிவாலயத்தில் நேற்று நிருபர்களை கருணாநிதி சந்தித்தார். அப்போது அவர், ""எங்கள் கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை என்றால், எங்களுக்கும் இந்தக் கூட்டணிக்கும் உள்ள உறவு நீடிக்குமா என்பது சந்தேகம்; நீடிக்காது என்பது உறுதி,'' என, மீண்டும் மிரட்டல் விடுத்தார்.

இதையடுத்து, காங்கிரஸ் மூத்த அமைச்சர்களான சிதம்பரம், அந்தோணி மற்றும் குலாம் நபி ஆசாத் ஆகியோர், கருணாநிதியை சென்னை சி.ஐ.டி., காலனியில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து பேசினர். அப்போது இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் நிலை குறித்து அவரிடம் மத்திய அமைச்சர்கள் விளக்கியதாக தெரிகிறது. எனினும் தமிழகத்தில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலைகளை சுட்டிக்காட்டிய கருணாநிதி, மத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேறும் தங்களது முடிவில் பிடிவாதமாக இருந்ததாகவும், மத்திய அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவளிக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முடிவு எட்டப்படவில்லை: சுமார் இரண்டரை மணி நேரம் நடந்த இந்த சந்திப்பில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. கருணாநிதியுடனான சந்திப்புக்கு பின் நிருபர்களிடம் பேசிய குலாம் நபி ஆசாத், இலங்கை விவகாரம் தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோருக்கு தி.மு.க., தலைவர் கருணாநிதி எழுதிய கடிதத்தின் அடிப்படையில் அவரை சந்தித்தாகவும், பேச்சின் போது கருணாநிதி தெரிவித்த கருத்துக்களை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தெரிவிக்கவுள்ளதாகவும் கூறினார்.

ad

ad