புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 மார்., 2013


பொதுநலவாய நாடுகளின்; மாநாட்டை மொரீஸியசுக்கு! இலங்கைக்கு அதிர்ச்சி!!

கொழும்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்தப்படவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை மொரீஸியசுக்கு மாற்றும் முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே குறித்த மாநாடு இலங்கையினில் நடந்தால் இங்கிலாந்து மகாராணி எலிசபெத் அம்மையார் பங்கேற்க மாட்டார் என லண்டனில் உள்ள பொதுநலவாய அமைப்பு செயலகத்தின் பெயர் வெளியிடாத மூத்த அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார் என இந்திய பத்திரிகையொன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில், இங்கிலாந்து மகாராணியார் பங்கேற்கமாட்டார் என்பது பெரும்பாலும் உறுதியாகிவிட்டதாக அவ்வதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார் எனவும் அப்பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கையின் மனித உரிமைகள் நிலைமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பல நாடுகளின் தலைவர்களும் கொழும்பு மாநாட்டில் இருந்து ஒதுங்கிகொள்ள வாய்ப்புள்ளதாகவு கூறப்படுகிறது. கனடா பிரதமர் இந்த மாநாட்டை புறக்கணிக்க உள்ள நிலையில், பிரிட்டன், நியூசிலாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளும் இந்த மாநாட்டை புறக்கணிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே இதில் இந்தியா சார்பில் யாரும் பங்கேற்கக் கூடாது என தி.மு.க, அ.தி.மு.க. கட்சிகள் இந்திய மத்திய அரசைக் கேட்டுக்கொண்டுள்ளன. இந்த மாநாட்டில் இங்கிலாந்து மகாராணி பங்கேற்காவிட்டால் அது இலங்கை ஜனாதிபதிக்கு பின்னடைவாக அமையும் என்ற காரணத்தால் இந்த மாநாட்டை மொரீஸியசுக்கு மாற்றும் முயற்சிகள் நடந்துகொண்டிருப்பதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

ad

ad