புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 மார்., 2013

சென்னையில் இலங்கை வீரர்கள் ஆட அனுமதி இல்லை: முரளீதரன் வேதனை
சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று ஐ.பி.எல். அமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கை தமிழர் பிரச்சினை காரணமாக தமிழ்நாட்டில் எழுந்த எதிர்ப்பு காரணமாகவே இலங்கை வீரர்கள் சென்னையில் விளையாட அனுமதிக்கப்படவில்லை. 

இதுகுறித்து இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீரரும், இலங்கை தமிழருமான முரளீதரன் கூறியதாவது:- 

சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளில் இலங்கை வீரர்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது மிகவும் துரதிருஷ்ட வசமானது. சென்னையில் நாங்கள் விளையாடுவதை விரும்பாததால் நாங்களும் சென்னை செல்ல விரும்ப வில்லை. இந்தியாவில் உள்ள ஒரு பகுதியில் நாங்கள் விளையாட அனுமதிக்கப்படாதது என்பது கிரிக்கெட்டுக்கு சோகமான நாளாக கருதுகிறேன்.

இது அரசின் முடிவாகும். நான் பெங்களூர் அணியில் விளையாடுகிறேன். நான் அங்கு செல்ல எந்த பிரச்சினையும் இல்லை. சென்னை அல்லாத இடங்களில் நாங்கள் விளையாடுவோம். இதோடு இந்த உலகம் முடிந்து விடவில்லை. வரும் காலங்களில் சென்னையில் ஆடுவோம். 

சென்னை எனது 2-வது தாய் வீடாகும். எனது மனைவி மதிமலர் அங்குதான் இருக்கிறார். நான் தமிழன் என்றாலும் இலங்கையை சேர்ந்தவன் தான் என்பதை முதலில் கொண்டுள்ளேன். போருக்கு பிறகு தமிழர்கள் அமைதியாக, சந்தோஷமாக வாழ்கிறார்கள். 

இவ்வாறு முரளீதரன் கூறினார்.

ad

ad