புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 மார்., 2013


மனித உரிமைகளுக்காக வாகனங்கள் மூலமாக இலங்கை இந்தியாவை பழிதீர்க்கிறது
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான அரசியல் முரண்பாடுகளால், இந்தியாவின் வாகன ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆங்கில ஊடகம் ஒன்றின் புதிய ஆய்வு ஒன்றில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இந்தியா கண்டனம் வெளியிட்டுள்ளது.
அத்துடன் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்ட இலங்கைக்கு எதிரான பிரேரணையும் இந்தியா ஆதரவளித்திருந்தது.
இவ்வாறான நிலையில் இந்தியாவின் டாட்டா, மருத்திசுசுக்கி, பஜாஜ், ஹீரோஹொன்டா, மஹேந்திரா போன்ற முக்கிய நிறுவனங்களின் உற்பத்திகளுக்கு இலங்கையில் வரவேற்பு குறைவடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனங்களின் உற்பத்திகள் மீது சுமத்தப்பட்டுள்ள அதிக வரிவிதிப்பே இதற்கான காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.

ad

ad