புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 மார்., 2013



ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 22 ஆவது கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருந்த நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் சுவிஸ் பொதுமக்களைச் சந்திக்க உள்ளார்.
 புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு சொலத்துண் மாநிலம் பிபறிஸ்ட் நகரில் இந்த எழுச்சி நிகழ்வு நடைபெறவுள்ளது.

மனித உரிமைப் பேரவை நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சீமான் அவர்கள் கடந்த வாரம் முதற் தடவையாக சுவிஸ் நாட்டிற்கு வருகை தந்திருந்தமை தெரிந்ததே. பேரவை நிகழ்வுகளில் பங்கு கொண்ட அவர் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் ஜெனீவா நகரில் ஐ.நா. முன்றலில் நடைபெற்ற ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்து கொண்டு எழுச்சி உரை ஆற்றியிருந்தார். குறுகிய கால அழைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஒன்றுகூடலில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் உறவுகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து டென்மார்க், யேர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்குச் சென்று தமிழ் மக்களைச் சந்தித்து உரையாடிய சீமான் அவர்கள் தற்போது மீண்டும் சுவிஸ் மக்களைச் சந்திப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஈழத் தமிழர்களுக்கு நீதிகோரித் தாய்த் தமிழகத்திலே தொடர்ச்சியாகக் குரல் தந்துவரும் சீமான் அவர்கள் தற்போது உலக மன்றங்களிலும் தோன்றி தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராகக் குரல் தர ஆரம்பித்துள்ளார்.
Biberena
 Emmen Str 3,
 4562 Biberist (SO)
 காலம் 27.03.2013
 நேரம் 17.30- 20.00

ad

ad