
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக செயற்பட்ட யாரும் மீண்டும் நாட்டிற்குள் வர முடியாது. இந்தியாவில் தேவையென்றால் தமிழீழம் ஒன்றை அமைத்துக் கொள்ளலாம். இலங்கையில் அந்த பேச்சுக்கே இடமில்லை என்று தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகச் செயாலாளர் பியசிறி விஜேநாயக்க தெரிவித்தார்.
அமெரிக்காவினதும் இந்தியாவினதும் கூட்டு முயற்சியே ஐ.நா. மனித உரிமை பேரவையின் இலங்கைக்கு எதிரான தீர்மானங்களாகும். எனவே இதனை அடியோடு நிராகரித்து 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக ஒழித்து, வடமாகாண சபை தேர்தலை அரசு நடத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.