புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 மார்., 2013


'உடனடியான அனைத்துலக விசாரணை வேண்டும்' ஐ.நா மனித உரிமைச் சபையில் நா.க.த. அரசு வெளியிட்ட கையேடு
இலங்கை தொடர்பில் சுதந்திரமானதொரு அனைத்துலக விசாரணை வேண்டும் என்ற குரல்கள் பல்வேறு தரப்புக்களிடம் இருந்தும் வலுத்து வரும் நிலையில் 'உடனடியான அனைத்துலக விசாரணை வேண்டும்: தமிழ் மக்கள் மீதான திட்டமிட்ட மனித உரிமை மீறல்கள் ' எனும் கையேடுடொன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமைச் சபையில் தமிழர் தரப்பு பிரதிநிதிகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் இராஜதந்திரச் செயற்பாடுகளுக்கு வலுவூட்டும் வகையில் இக்கையேடு ஐ.நா மனித உரிமைச் சபை வளாகத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை தொடர்பில் அமரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணை ஒன்றினை சபையில் சமர்பிக்கப்படவுள்ள நிலையில் இக்கையேடானது அனைத்துலக விசாரணைக்கான தேவை வலியுறுத்தி நிற்கின்றது.
நா.த.அரசாங்கத்தின் மனித உரிமைகள், போர்குற்றம், இனப்படுகொலை விவகாரங்களுக்கான அமைச்சகத்தினால் உருவாக்கப்பட்ட இந்தக் கையேடானது 2012ஆம் ஆண்டில் மனித உரிமைப் பேரவைக் கூடத் தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் அதன் தொடர்பான செயற்பாடுகளையும் ஆராய்கின்றது. அத்துடன், இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட காலத்திலிருந்து  பொறுப்புக்கூறல் தொடர்பாக இலங்கை செய்தவற்றையும், செய்யாது விட்டவற்றையும் இந்தக் கையேடு ஆவணப்படுத்துகின்றது. அது மட்டுமன்றி ஐநா வினதும் அனைத்துலக சமூகத்தினதும் செயற்பாட்டின் குறைபாட்டையும் இந்நூல் விளக்குகின்றது.
கடந்தாண்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட 'நாம் நீதி வேண்டுகின்றோம்: போர்க்குற்றங்களும் இனஅழிப்பும்- அனைத்துலக விசாரணைக்கானஆதாரங்கள்' எனும் கையேட்டின் தொடர்சியாக வெளிவந்துள்ளது.
இதேவேளை ஐ.நாவுக்கு வெளியேயாக பல்வேறு நாடுகளிலும் இக்கையேடு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டு வருகின்றது.
30 பக்கங்கள் அடங்கிய இக் கையேட்டினைப் பார்வையிட , தரவிறக்க  இங்கே அழுத்தவும்.

ad

ad