புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 மே, 2013



         ரக்காணம் கலவரம் குறித்தும், அங்கே பா.ம.க. தொண்டர்கள் இருவர் கொல்லப் பட்டது குறித்தும் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். புலன் விசாரணையை சி.பி.ஐ. நடத்த வேண்டும் என்று பா.ம.க. தலைவர் nakeeranaமருத்துவர் ராமதாசும், பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாசும் கோரிக்கை வைத்துள்ளனர்.

மரக்காணம் கலவரம் எப்படி ஏற்பட்டது? சித்திரை முழுநிலவுப் பெருவிழா வுக்கு 25.4.13 அன்று வேன்களில் வந்த அரியலூர் மாவட்ட வெண்மான்கொண்டான் செல்வராஜும், நாகை மாவட்டம் தேவனாஞ் சேரி விவேக்கும் எப்படிக் கொல்லப்பட்டார்கள் என்ற கள விசாரணையில் இறங்கினோம்.


முதலில் நாம் சென்ற இடம் மரக்காணம் கட்டையன்தெருக் காலனி. மரக்காணம் மெயின்ரோட்டிலிருந்து 500 மீட்டர் தொலைவில், பாரஸ்ட் தோப்பை கடந்து அந்தக் காலனிக்குள் நுழைந்தோம். ""பா.ம.க. காரர்களிடம் முதலில் அடிவாங்கிய 5 பேரில் ஒருத்தன் பெயர் பிரவீன். அதோ அந்த வீட்ல இருப்பான். போய் விசாரிங்க!'' -வழிகாட்டினார் காலனிப் பெரியவர் ஒருவர்.



பிரவீனைச் சந்தித்தோம்.

""நாங்க 5 பேர் பாண்டியில் ஒரு கம்பெனியில் வேலை செய்றோம். பாண்டியில் இருந்து அன்று பஸ்ஸில் வந்த நாங்க மதியம் 12.30 மணிக்கு வழக்கம் போல் மரக்காணம் குவார்ட்டர்ஸ் பாதை பஸ் ஸ்டாப்பில் இறங்கினோம். சாலையோரம், பா.ம.க. வேன்கள் 2 பார்க் செய்யப் பட்டிருந்தது. 4 போலீஸ்காரர்கள் நின்றனர். அதைப் பற்றிப் பேசிக் கொண்டே எங்கள் கட்டையன் காலனி நோக்கி நடந்தோம். வழியில் பாரஸ்ட் காட்டில், மஞ்சள் டீசர்ட்-ட்ரவுசர் போட்ட நாற்பது, ஐம்பது ஆட்கள் இரண்டு கும்பலாக உட்கார்ந்து தண்ணி அடித்துக் கொண்டிருந்தார்கள். அப்ப நாங்க "ஏற்கனவே போன வருஷம் இங்கேதான் பிரச்சினை நடந்தது. மறுபடி இந்த வருஷமும் பிரச்சினையை உண்டாக்காம எந்திரிச்சு போங்க'ன்னு சொன்னோம். "வாங்கடா சேரி பசங்களா உங்களுக்குதாண்டா காத்திருந்தோம்'னு சவுக்கு கட்டை களை எடுத்துக் கொண்டு, ஓடி வந்து விரட்டி விரட்டி அடிச்சாங்க. 4 பேர் அடியை வாங்கிக் கொண்டு காலனிக்கு ஓடினாங்க. எனக்கும் காயம்தான். நான் போலீஸ்காரர்களிடம் சொல்ல மெயின் ரோட்டுக்கு ஓடினேன். அங்கே இருந்த போலீஸ்காரர்களிடம் நடந்ததைப் பதட்டத் தோடு சொன்னேன். "நீ ஏண்டா அவனுங்க கிட்ட வம்புக்கு போனேன்'னு என்னை அடிச்சாங்க. நான் மரக்காணம் ஊருபக்கம் ஓடுனேன். காலனிக்கு ஓடிவந்த 4 பேரை விரட்டிக் கொண்டு வந்த நாற்பது, ஐம்பது பேரும் காலனியின் முன்னால் இருந்த வீடுகளுக்கு தீவச்சிட்டாங்க. கொஞ்ச நேரத்தில், அகரத்திலிருந்து சின்னக்காடு வழியாக எங்க கட்டையன் காலனிக்கு நூற்றுக்கணக்கான பா.ம.க.காரங்க வந்து கடைகளை அடித்து நொறுக்கி தீ வச்சிட்டாங்க.

வயக்காட்டு வேலைகளுக்கு போயிருந்த எங்க ஜனங்க அப்புறம்தான் வந்து மெயின்ரோட்டுக்கு போய் சாலை மறியல் செஞ்சாங்க. அதே சமயத்தில் மரக்காணம் ஊரிலிருந்தும் நூற்றுக்கணக் கான தலித் மக்கள் வந்து சாலைமறியல் செஞ்சாங்க. அதன் பிறகுதான் போலீஸ் வந்து எங்களை அடித்து விரட்டிச்சு!'' என்று விரிவாகவே சொன்னார்.


மரக்காணத்திற்கு சென்றோம். ஊர்த்தலைவர் தயாளனைச் சந்தித்தோம். "3 வருடத்திற்கு முன்னால்வரை அ.தி.மு.க. காரராக இருந்த நான் இப்போது எந்தக் கட்சியிலும் இல்லை' என்று கூறினார்.


கலவரம் பற்றிக் கேட்டோம்.


""போன வருஷமெல்லாம் மாமல்ல புரம் பா.ம.க. விழா நாளில், பாண்டியில் உள்ள அத்தனை பிராந்தி மற்றும் சாராயக் கடைகளையும் மூடிவிட்டார்கள். இந்த வருஷம் அந்த நாளில் திறந்தே வைத்திருந்தார் கள். பாண்டி வழியாக வந்த சுமார் 1800 வாக னங்களில் பெரும்பாலான வற்றில் வந்தவங்க அங்கே மூக்கு முட்டக் குடித்து விட்டே, கத்தி பிளிறிக் கொண்டு வந்தாங்க. அப்படி வந்தவர்கள் கூட கலவரத்தை விதைக்கவில்லை. மரக்காணத்திலேயே 2 பேர் இருக்கிற ôர்கள். டெடல் தோப்பையும் பெரிய மண்டபத்தையும் சேர்ந்த 2 மாம்பழக்காரர்கள், திட்டமிட்டே வெளியூர் ஆட்களை இறக்கி, மரக்காணத்தில் இருந்து அனுமந்தை டோல்கேட் வரைக்கும் வண்டிகளை நிறுத்தி இந்தக் கலவரத்தை துவக்கியவர்கள். நாங்கள் செய்ததெல்லாம் சாலைமறியல்தான். காவல்துறையினர் வந்து சாலைமறியல் செய்த எங்களைத்தான் அடிச்சு விரட்டினாங்க!'' என்றார் தயாளன்.


மரக்காணத்திலிருந்து நாகை மாவட்டம் கும்ப கோணம் அருகில் உள்ள தேவனாஞ்சேரிக்குச் சென்றோம்.


கலவரத்தில் உயிரிழந்த இருவரில், தேவனாஞ்சேரி செல்வேந்திரனின் மகன் விவேக்கும் வயது (19) ஒருவர்.
இந்த விவேக்கின் மரணம் ஒரு விபத்து என்று காவல் துறை கூறுகிறது. பா.ம.க.வினரோ கொலை என்கின்றனர். உண்மை என்ன?

விவேக்குடன், பெருவிழாவுக்கு வந்த அதே ஊர் இளைஞர்களிடம் விசாரித்தோம். ""கும்பகோணம் ஏரியாவுல இருந்து 11 வேன்கள் போனது. அதில் 7-வது வேன் எங்க ஊர் வேன். விவேக்கும் இன்னும் நாலஞ்சு பேரும் வேன் கேபின்ல உக்கார்ந்து கோஷம் போட்டுக் கொண்டே வந்தானுங்க. நாங்க "வேண்டாண்டா கோஷம் போடா தீங்கடா' என்று எச்சரித்துக் கொண்டே வந்தோம். நாங்க அணைக்கரை-திண்டிவனம் வழியா போறதாதான் பிளான் செய்திருந்தோம். ஏன்னு தெரியலை. வேனை பாண்டிச்சேரி வழியா திருப்பி விட்டுவிட்டார்கள். ஒரு இடத்தில் வண்டிகளையெல்லாம் நிறுத்தி வைத்திருந்தார்கள். பதட்டமாக இருந்தது. கொஞ்ச தொலைவில்தான் மரக்காணம் என்றார்கள். கல்வீச்சு, அடிதடி, கலவரம் என்று சொல்லிக்கொண்டு, சிலர் ஓடிவந்தாங்க. எங்க டிரைவர் வேகமாக வண்டியைத் திருப்பினார். மேலே கேபினில் இருந்த விவேக்கும் இன்னும் ரெண்டு, மூணுபேரும், பார்த்துவிட்டு வருகிறோம்னு குதித்து ஓடினாங்க. ஓடிய வேகத்தில் "அடிக்கிறானுங்க அடிக்கிறானுங்க' என்று அலறிக் கொண்டே ஓடி வந்தான் விவேக். அதற்குள் வேன் வேகம் பிடித்துவிட்டது. வேனைப் பிடித்துத் தொற்றிய விவேக், சிலிப்பாகி கீழே விழுந்துவிட்டான். எங்க பின்னாடி வந்த இன்னொரு வேன்ல அடிபட்டுவிட்டான்!'' என்கிறார்கள் சோகமாக.


விவேக்கின் தந்தை செல்வேந்திரன் நம்மிடம், ""ஆளாளுக்கு ஒருமாதிரி சொல்றாங்க. ஆட்டோ ஓட்டி குடும்பத்தையே காப்பாத்தின என் புள்ளைய... அநியாயமாக இழந்து விட்டோம்!'' பரிதாபமாகக் கதறினார் அந்தத் தந்தை.


மரக்காணத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் அனுமந்தை டோல்கேட் ஏரியாவில், விவேக்கின் உயிரைப் பறித்த விபத்து நடந்ததாக சொன்னார் ஒரு வாலிபர்.


அரியலூர் மாவட்டம் வெண்மான்கொண்டானைச் சேர்ந்த, லாரி ஓட்டுநர் செல்வராஜ்(37) எப்படிச் இறந்தார்?

""அவர் சாதாரணமாக சாகலை. எங்க வண்டிக்கு முன்னால ரெண்டு வண்டி நின்னது. இறங்கிப் பார்த்தேன். யாரையோ பத்துப் பதினைந்து பேர் கொண்ட கும்பல் வெட்டுவது தெரிந்தது. நம்ம சாதிக்காரனாயிற்றேன்னு வெட்டாதே வெட்டாதே என்று கத்திக் கொண்டே ஓடினேன். அவரை வெட்டின கும்பல் என்னை வெட்டத் தொடங்கியது. நாலு போலீஸ்தான் நின்னு வேடிக்கை பாத்துச்சு. நான் அப்படியே மயங்கிட்டேன்!'' -திக்கித் திணறி வாயில் ரத்தம் கசியச் சொன்னார் செந்துறை அருகிலுள்ள சிறுகடம்பூரைச் சேர்ந்த 25 வயது இளைஞரான லட்சுமணன்.

லட்சுமணனின் நடுமண்டையில் ஒரு வெட்டு, தாடையில் ஒரு வெட்டு. இரண்டு கைகளிலும் வெட்டு. வாயைச் சரியாகத் திறக்க முடியாத அளவுக்கு அடிபட்டிருக்கிறார். பாண்டிச்சேரியில் முதலுதவி பெற்று, திருச்சியில் சிகிச்சை பெற்று, சரியாக, குணமாகுமுன்பே, ஊர் திரும்பியிருக்கிறார் லட்சுமணன்.

லட்சுமணனோடு வேனில் சென்ற உள்ளூர்க்காரர் களான செந்தில், ராஜீவ்காந்தி, தேவேந்திரன் ஆகியோர் நம்மிடம், ""வேனை விட்டு இறங்கின எங்களையும் வெட்டு வதற்காக ஓடிவந்ததும்... நாங்க தெறிபட்டு ஓடிவிட்டோம். ரொம்ப நேரம் கழித்து, போலீஸ் வந்து கலவரக்காரர்களை விரட்டியதும்தான் லட்சுமணனை இரண்டு மூன்று கிலோமீட்டர் தூரம் வரை தூக்கிக் கொண்டு ஓடினோம். அப்புறம் யாரோ ஒரு டூவீலர்க்காரர் நிறுத்தினார். அவ ருடைய டூவீலரில் பாண்டிச்சேரி தூக்கிச் சென்று லட்சுமண னைக் காப்பாற்றினோம். இப்ப நினைச்சாலும் குலை நடுங்குது'' என்கிறார்கள்.


அரியலூர் பா.ம.க. மாவட்டச் செயலாளர் திருமா வளவன் நம்மிடம் ""செல்வராஜ் செல்ஃபோனுக்கு அவர் நண்பர் ராமச்சந்திரன் போன் போட்டார். அட்டன்ட் பண்ணவன்... "இவன் பேரு செல்வராஜா? இவனை நாங்க தாண்டா வெட்டிக் கொன்னோம். செல்போனை நான்தாண்டா எடுத்து வச்சிருக்கேன். வந்து இவன் பாடியை அள்ளிட்டு போடா'னு ஒரு குரல் கொஞ்சமும் இரக்கமேயில்லாமல் சொன்னது. விழுப் புரம் அரசு மருத்துவமனைக்கு உடலை வாங்க நான் போனபோது ஒரு ஆணின் பிணம் கரிக்குப்பத்தில் கிடந்ததாக வி.ஏ.ஓ. புகார் கொடுத்திருந்தார். போலீசாரோ வாகன விபத்தில் இறந்ததாக வழக்குப் பிரிவை போட்டிருந்தார்கள். உடல் முழுக்க கடுமையான வெட்டுக்காயங்கள். எப்படி வாகன விபத்தாகும். நாங்கள் போராட்டத் திற்கு தயாரானதும் செல்வராஜ் வெட்டிக் கொலை செய்யப்பட்டார் என்று கேஸை மாற்றியிருக்கிறார்கள்!'' வேதனையுடன் சொன்னார். தத்தளித்து நிற்கிறார் மூன்று சின்ன குழந்தைகளுடன் செல்வ ராஜின் மனைவி சித்ரா.


""லாரி ஓட்டிட்டு 4 நாள் முன்னதான் ஊருக்கு வந் தார். வாங்க மாநாட்டுக்கு போய் வரலாம்னு ஊர்க் காரர்கள் கூப்பிட்டதால போனவரை கொத்திக் குத றின பிணமாகக் கொண்டு வந்து இறக்கிப் போட்டாங்க!'' -வாயிலும் வயிற்றிலும் அறைந்து கொண்டு கதறி னார் அந்த அப்பாவித் தாய்.


-எம்.பி.காசி, எஸ்.பி.சேகர், செல்வகுமார்

ad

ad