இந்தக் கும்பலிடம் ஏமாந்தவர்கள் ஒன்றும் ஏப்பை சாப்பையானவர்கள் அல்ல; அரசியலில் நன்கு ஊறித் திளைத்த அனுபவஸ்த்தர்கள். அப்படிப்பட்டவர்களையே ஏமாற்றியிருக்கிறது அந்தத் தில்லாலங்கடிக் கும்பல்.
அழகிரியின் மருமகள் பெயர் அனுஷா. துரை தயாநிதியின் மனைவி. இவர் பெயரால் ஏமாற்றப்பட்டிருக்கிறார் மதுரையின் முன்னாள் துணை மேயரான மிசா பாண்டியன். எப்படி என்பதை அவரே விவரிக்கிறார்.
""என் போன்ல வந்த ஒரு பெண்குரல், "அங்கிள், நான் துரை தயாநிதியின் மனைவி அனுஷா பேசறேன். எப்படி இருக்கீங்க'ன்னு கேட்டது. அச்சு அசலா அதே குரலைப்போல் இருந்ததால், நான் ஆச்சரியமாகி, "சொல்லு தாயீ, என்ன விசயம்?'னு கேட்டேன். அந்தப் பெண்குரலோ, "நானும் என் வீட்டுக்காரரும் வந்தப்ப, எங்க கார் கரூர் பக்கத்தில் ஆக்ஸிடெண்ட் ஆயிடிச்சி. யாருக்கும் ஒண்ணும் அடியில்லை. எனக்கு ஒரு காரையும் ஒரு 15 ஆயிரம் ரூபாயையும் அனுப்பி வையுங்க. நாங்க ஊர் திரும்பியதும் கொடுத்துடறோம்'னு சொன்னது. நானோ, "என்ன தாயீ, உனக்குச் செய்யாம நான் யாருக்கு செய்யப் போறேன். நீ சொல்ற மாதிரியே காரையும் பணத்தையும் இப்பவே அனுப்பி வைக்கிறேன்'னு சொன்னேன். அப்ப அந்தப் பெண்குரல், "கார் ஆக்ஸிடெண்ட் ஆன விஷயம் மாமாவுக்கும் அத்தைக் கும் தெரிய வேணாம். சொன்னா பதட்டமாயிடுவாங்க. நான் கன்சீவாகி இருப்பதால் ரொம்ப பயந்துடுவாங்க'ன்னு பரிதாப மாச் சொன்னுச்சு. நானோ, "தாயீ, இதை நான் யார் கிட்டயும் சொல்லலை'ன்னு சொல் லிட்டு சிகப்பு நிற வோல்க்ஸ் வேகன் புதுக் காரையும், 15 ஆயிரத்தையும் என் டிரைவர் மூலம் கொடுத்தனுப்பினேன். அங்க கரூர் வேலாயுதம்பாளையம் அய்யங்கார் பேக்கரிக்கிட்ட எங்க டிரைவரை காரை விட்டுட்டுப் போகச் சொல்லியிருக்காங்க. எனக்கோ அழகிரியண்ணன் மரு மகள் ரொம்ப உரிமையா உதவி கேட்டுச்சேன்னு சந்தோசமான சந்தோசம்.
மறுநாள் காலை சென்னைக்குப் போயிருந்த என் மகன் மருதுபாண்டி வந்தான். அவங்கிட்ட, "தம்பி, விசயம் தெரியுமா? அழகிரி யண்ணன் மருமகள் அனுஷா, நம்ம காரையும் 15 ஆயிரம் ரூபாய் பணத்தையும் கேட்டுச்சு. கொடுத்து விட்டிருக்கேன். அவங்க கார் கரூர்கிட்ட ஆக்ஸிடண்ட் ஆயிருச் சாம். உனக்குக் கார் வேணும்னா என் ஸ்கார்பியோ காரை எடுத்துக் கிட்டுப் போ'ன்னேன். என் மகனோ "என்னப்பா உளர்றே? நானும் துரை தயாநிதியும் நேத்து நைட் 9 மணிவரை சென்னையில் ஒரு ஓட்டல்ல உட்கார்ந்திருந்தோம். அதன் பிறகுதான் பாண்டியனைப் பிடிச்சி மதுரைக்கு வந்தேன்'னு சொல்ல... தலை கிறுகிறுத்துப் போச்சு. உடனே துரை தயாநிதிக்குப் போன் போட்டு என் பையன் விவரத்தைச் சொல்ல, துரை தயா நிதியோ, "உங்கப்பாவை யாரோ ஏமாத்தியிருக்காங்க. முதல்ல காரை டிரேஸ் பண்ணுங்க'ன்னு சொன்னார். மறுநாள் அதே இடத்தில் கார் இருந்தது. காரை விட்டவங்க, அந்த ஸ்வீட் கடையில் 1,500 ரூபாய்க்கு ஸ்வீட்டையும் பார்சல் பண்ணிக்கிட்டு, "இந்தக் காரை எடுக்க எங்க டிரைவர் வருவார். அவர் உங்க பில்லையும் கொடுப்பார்'னு சாவியை அங்கேயே கொடுத்துட்டுப் போயிருக்காங்க. கடைசியில் அவங்களுக்கான ஸ்வீட் கடை பில்லையும் கட்டிட்டு காரை மீட்டுக்கிட்டு வந்துட்டோம். அரசியல்ல எவ்வளவோ விவகாரத்தைப் பார்த்த என்னையே, ஒரு கும்பல் லேடி வாய்ஸ்ல பேசி ஏமாத்தியிருக்குன்னா என்னன்னு சொல்றது?''’என்றார் கொஞ்சம் லஜ்ஜையோடு.
இது இப்படியிருக்க, மதுரை மாநகர் தி.மு.க. மா.செ. தளபதிக்கும் இதேபோல் ஒரு அனுபவம். அதை அவரே சொல்கிறார்...
மதுரை காக்கிகளோ ""இந்த வழக்கை சைபர் க்ரைம் பிரிவினர் விசாரிக்கிறார்கள். அந்த டுபாக்கூர் பெண் குரல் எந்தெந்த நம்பரில் இருந்து வந்தது என்று பார்த்தபோது எல்லாமே பொய் முகவரியாக இருந் தது. எனினும் தீவிர விசா ரணை நடக்கிறது. குற்ற வாளிகள் விரைவில் பிடி படுவார்கள்''’என்கிறார்கள் நம்மிடம்.
வாய்ஸானவர்களின் வாய்ஸில் பேசி, மோசடி பண்ணிய அந்தக் கும்பல் எங்கே?
-முகில்