புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 மே, 2013



        ன்முறைக்கு பா.ம.க.வின் இளைஞ ரணியைச் சேர்ந்தவர்கள்தான் காரணம் என சட்டமன்றத்தில் பகிரங்க குற்றச்சாட்டு, தடை மீறி மறியல் செய்த டாக்டர் ராமதாஸ் மீது கைது நடவடிக்கை, மாமல்லபுரம் மாநாட்டுப்  பேச்சுக்காக காடு வெட்டி குரு கைது, இருவரும்nakeertan ரிமாண்ட் செய்யப்பட்டு சிறையில் அடைப்பு என ஏப்ரல் மாதத்தின் கடைசி நாட்களில் நடந்த அரசியல் அதிரடிகளுக்கான பின்னணி பற்றி நிறையவே சொல்கிறார்கள் போயஸ் தோட்டத்துக்கு நெருக்கமானவர்கள். 

சித்திரை பவுர்ணமி நாளான ஏப்ரல் 25-ந் தேதி மாமல்லபுரத்தில் நடந்த மாநாட்டில் சாதி உணர்வுகளைக் கிளறிவிடும் வகையிலும், அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் போக்கிலும் நடந்த சம்பவங்கள் குறித்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தை மறுநாள் (ஏப்.26) மார்க்சிஸ்ட் பாலபாரதி, புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆறுமுகம் ஆகியோர் முன்வைக்க, இதுபற்றி சபாநாயகர் அலுவலகத்திலிருந்து ஜெ.வுக்குத் தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

மாமல்லபுரம் மாநாடு, மரக்காணம் கலவரம் ஆகியவை குறித்த போலீஸ் ரிப்போர்ட்டை அப்போது ஜெ. முழுமையாகப் படிக்கவில்லை என்கிற தோட்டத்து ஆட்கள், அதனால் அன் றைய தினம் அது பற்றிய கவன ஈர்ப்புத் தீர்மானத் தை சட்டமன்ற விவாதத்திற்கு எடுக்கவில்லை என்கிறார்கள். அடுத்த இரண்டு நாட்கள் சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதால், 29-ந் தேதி திங்களன்று பேரவையில் இதுபற்றிய கவன ஈர்ப்புத் தீர்மானம் வருகிறது. 

போலீஸ் தரப்பிலிருந்து தரப்பட்ட விவரங்கள் அனைத்தையும் முழுமையாகப் படித்துப் பார்த்த ஜெ.வின் பார்வைக்கு, அன்று காலையில் "தி ஹிந்து' பத்திரிகையில் வெளியான ஒரு செய்தியின் கட்டிங்கும் வைக்கப்பட்டிருந்தது. 1500 ஆண்டுகள் பழமையானதும் உலகப் பாரம்பரியச் சின்ன மாக விளங்குவதுமான மாமல்லபுரம் கடற்கரைக் கோயி லின் மீது பா.ம.க.வினர் ஏறி நின்று, வன்னியர் சங்கக் கொடிகளைக் கட்டியது சம்பந்தமான படத்துடன் கூடிய செய்தி அது. போலீஸ் ரிப்போர்ட்டால் டென்ஷனில் இருந்த ஜெ.வின் மனநிலையை, இந்த செய்தி மேலும் அதிகப்படுத்தியுள்ளது என்கிறார்கள் கார்டன் வட்டாரத்தினர்.

மாநாடு சம்பந்தமான ஒரு வீடியோ கவரேஜையும் ஜெ. பார்த்திருக்கிறார். அதில் பா.ம.க. தரப்பில் பேசியவர்களின் வார்த்தை களையும், அவர்களின் ஆக்ரோஷத்தையும் கண்டு முகம் சுளித்த ஜெ.வை, படுடென்ஷ னாக்கியிருக்கிறது அந்த  மாநாட்டில் மேடையேற் றப்பட்ட ஒரு நாடகத்தின் காட்சி. அந்தக் காட்சி யில், ஜெ. வேடத்தில் ஒருவர் வருகிறார். அவர், ராமதாஸ் வேடத்தில் இருந்தவரிடம் வருகிறார். ஜெ.வாக வந்தவர், ராமதாசாக இருந்தவரிடம் பிச்சை கேட்பது போன்ற காட்சிதான் அது. நாடகத்தைப் பார்த்த ஜெ. டென்ஷனானார். அடுத்து அவரிடம், மரக்காணம் கலவரம் சம்பந்தமான வீடியோ போட்டுக் காண்பிக்கப் பட்டுள்ளது.


அதையும் கவனமாகப் பார்த்த ஜெ., பா.ம.க.வுக்கும் விடுதலைச் சிறுத்தைகளுக்கு மான மோதல் குறித்த உளவுத்துறையின் ரிப்போர்ட்டையும் படித்துப் பார்த்திருக் கிறார். மாநாட்டில் குரு, ராமதாஸ் ஆகி யோர் பேசிய உச்சகட்ட பேச்சுகளையும் அது  உண்டாக்கிய உணர்வுகளையும் பற்றி போலீஸ் கொடுத்த ரிப்போர்ட்டையும் ஜெ. படித்தார் என்கிறது கார்டன் தரப்பு. அந்த  ரிப்போர்ட்டில், ராமதாஸ் தன்னுடைய பேச்சு இரவு 10 மணியைத் தாண்டி போனதைப் பற்றிக் குறிப்பிட்டு, "முடிந்தால் கைது செய்து பாரு' என்று சொன்னதை, திரும்பத் திரும்பப் படித்திருக்கிறார் ஜெ. அதன்பிறகுதான், அவர் சட்டமன்றத்தில் என்ன பேசவேண்டும் என்ற உரையைத் தயாரித்திருக்கிறார்.

அந்த சமயத்தில்தான், விழுப்புரத்தில் ஏப்ரல் 30-ந்  தேதி ஆர்ப்பாட்டம் செய்ய ராமதாஸ் திட்டமிட்டிருக்கிறார் என் றும் அதற்கான அனுமதியை வழங்க லாமா என்று ஜெ.வுக்கு குறிப்பு வர, அனுமதிக்க வேண்டாம் என உத்தரவிட்டிருக்கிறார்.

ஏப்ரல் 29-ந் தேதி சட்ட மன்றத்தில் பா.ம.க.வினருக்கும் அ.தி.மு.க அமைச்சர்களுக்கும் பலமான வாக்குவாதம் நடந்துகொண்டிருந்த நிலையில்  குறுக்கிட்ட ஜெ., மாமல்லபுரம் மாநாடு- மரக்காணம்  சம்பவம் பற்றிய தன்னுடைய கருத்துகளை முன் வைத் தார். பா.ம.க.வினர் தான் வன்முறையில் ஈடுபட்டனர் என சொன்னதோடு, அவர்கள் வந்த வாகனத்தில் திட்டமிட்டே பதிவெண்களை மாற்றிவந்து, மரக்காணம் தலித் பகுதியில் உள்ள வீடுகளைத் தாக்கினர். மற்ற இடங்களில் இருந்த அனைத் துக் கட்சிக் கொடிகளையும் தலைவர்களின் படங்களையும் சேதப்படுத்தினர் என அந்த  சம்பவங்கள் பற்றி சொல்லிக்கொண்டே போனார். அவருடைய பேச்சு முழுவதுமே பா.ம.க மீது குற்றம்சாட்டும் வகையிலேயே இருந்தது.

ஜெ.வின் சட்டமன்றப் பேச்சு குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸ், ""போலீசார் எழுதிக்கொடுத்ததை மட்டுமே ஜெயலலிதா படிக்கிறார். நடந்த சம்பவங்கள் பற்றி உறுதிசெய்து கொண்டு பேசவில்லை'' எனத் தெரிவித்தார். அப்போது ஜெ.வுக்கு காவல்துறையிடமிருந்து, மரக் காணம் சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் வன்னியர் சங்க நிர்வாகிகளை தொடர்புகொண்டு கலவரத்தை உருவாக்க ராமதாசும் குருவும் பேசிக்கொண்டிருக் கிறார்கள் என்ற தகவல் வந்து சேர்கிறது.

இரவு நேரத்தில் (ஏப்.29) போயஸ் கார்டனில் அவசர ஆலோசனை நடத்தினார் ஜெ. முதல்வரின் செயலாளர் வெங்கட்ரமணன், உள்துறை செயலாளர் ராஜகோபால், டி.ஜி.பி. ராமானுஜம் உள்ளிட்டோர் கலந்துகொண்ட அந்தக் கூட்டத்தில் டி.ஜி.பி.யும் உள்துறைச் செயலாளரும், "கடலூர் மாவட்டத்திலும் இன்னும் சில மாவட்டங்களிலும் ராமதாஸ் நுழைவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நாம் நீக்கினோம். அவருக்கு தனிப்பட்ட பாதுகாப்பு படையும் கொடுத்தோம். அப்படி யிருந்தும், மரக்காணம் கலவரத்தில் எஸ்.பி.யின் சுழல்விளக்கு காரையே அடித்து நொறுக்கிட் டாங்க. தர்மபுரி கலவரத்தில் நாம்  வன்னியர் களுக்கு ஆதரவாக இருந்ததாக விடுதலை சிறுத்தைகள் பிரச்சாரம் செய்கிறார்கள்' என்று சொல்லியுள்ளனர்.

முதல்வரின் செயலாளர் வெங்கட்ரமணன், "ராமதாஸ் மீது குண்டர்  சட்டத்தில் நட வடிக்கை எடுக்கலாமா? சாதிக்கலவரத்தைத் தூண்டும் அரசியல் கட்சிகள் மேல் என்ன நடவடிக்கை எடுக்கலாம்' எனக் கேட்க, அது ஜெ.வின் வாய்ஸ்தான் என்பதை மற்ற அதிகாரி கள் புரிந்துகொண்டனர். இப்படிப்பட்ட கட்சிகளைத் தடை செய்வது  தொடர்பாக  தேர்தல் கமிஷனிடமும் மத்திய அரசிடமும் பரிந்துரைக்க வாய்ப்புள்ளதா என ஆய்வு  செய்து வருகிறோம் எனப் பதிலளித்துள்ளார் உள்துறைச் செயலாளர்.

எல்லாவற்றையும் கேட்டபடி இருந்த ஜெ., "ராமதாஸ் உள்ளிட்ட பா.ம.க.வினர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுங்கள். ராமதாஸ் கைதானவுடன் ஏற்படும் ரியாக்ஷனைப் பார்த்து அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி சொல்கிறேன்' என்றிருக்கிறார். 30-ந் தேதி தடை மீறி ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்ட ராமதாஸ் கைது, மாமல்லபுரம் மாநாடு சம்பந்தமான வழக்கில் குரு கைது, அதைத் தொடர்ந்து 3000 பா.ம.க.வினர் கைது என நடவடிக்கைகள் வேகமெடுக்க, ராமதாஸை ரிமாண்ட் செய்ய வலியுறுத்தியும், ஜாமீனுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என்றும் அரசு வழக்கறிஞருக்கு ஜெ. தரப்பிலிருந்து  உத்தரவுகள் வந்தன. மாலையில் ராமதாஸ், குரு உள்ளிட்டோர் ரிமாண்ட் செய்யப்பட்டனர்.

இதைத்  தொடர்ந்து, பொதுசொத்துகளுக்கு பா.ம.க.வினர் ஏற்படுத்தும் சேதங்கள் குறித்த விவரங்கள் அனைத்தையும் தனக்குத் தெரிவிக்கும் படி காவல்துறைக்கு ஜெ. உத்தரவிட்டார். கைது-சிறை போன்ற நடவடிக்கைகளை ராமதாஸ் எதிர்கொள்ளத் தயங்குவார் என்பது ஜெ.வின் நிலை. "1991-96 ஆட்சிக்காலத்தில் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தபோது, தன் மனைவி மூலமாகக்  கண்ணீர்க் கடிதம் எழுதி விடுதலை கேட்டவர்தான் அவர். கைது செய்து பார் என்று பேசுவாரே தவிர, சிறைவாசத்தை அனுபவிக்க மாட்டார்' என்று உயரதிகாரிகளிடம் சொல்லி யிருக்கிறார் ஜெ. 

ராமதாஸின் கைது நடவடிக்கையைத் தொடர்ந்து பா.ம.க.வின் மூவ் என்ன? வட மாவட்ட தலித் மக்கள் அ.தி.மு.க.வை ஆதரிக்கிறார்களா என்பது பற்றியெல்லாம் ரிப்போர்ட் கோரியிருக்கும் ஜெ., அதனடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்  என்றிருக்கிறாராம். விடுதலைச்சிறுத்தைகள் மீதும் ஜெ.வுக்கு நல்ல அபிப்ராயம் இல்லை என்கிறது கார்டன் தரப்பு. இதனிடையே, ராமதாஸை விடுவிக்கக்கோரி வன்னியர், கவுண்டர், தேவர் சமுதாயத்து பிரமுகர்கள் ஜெ.வுக்கு கடிதம் எழுதி யுள்ளனர். அதேநேரத்தில், கைது நடவடிக்கையால் ராமதாசுக்கு ஆதரவான வன்னியர் அலை எதுவும் உருவாகவில்லை என ரிப்போர்ட் தந்துள்ளதாம் உளவுத்துறை.

ad

ad