புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 மே, 2013



நிஜ ஃபைட்டர்களின் ஃபைட்!

காரசார மோதலும், கடும் வாக்குவாதமுமாக அனலடித்துக்கொண்டிருக்கிறது ஒரு மேட்டர். வெளியே தெரியாத அந்த சங்கதியின் ஃபுல் விவகாரமும் இதோ:-nakkeran

ஆக்கிரமிப்பு!

ஒரு தமிழ்த் திரைப்படத்தின் படப்பிடிப்பை ஆந்திராவிலோ, மும்பையிலோ நடத்துவது டைரக்டரின் முடிவு. அப்படி வெளி மாநிலங்களில் படப்பிடிப்பு நடக்கும்போது...  சண்டைக்காட்சிகள் எடுக்கப்பட்டால் அதில்  70 சதவிகித ஸ்டண்ட் கலைஞர்கள்  அந்த மாநிலத்தவர்களாகவும், 30 சதவிகித ஸ்டண்ட் கலைஞர்கள் மட்டுமே தமிழ் கலைஞர்களாக வும் இருக்கிறார்கள். 

50-50 பிளான்!

தமிழ்ப் படத்தில் தமிழ் ஸ்டண்ட் மாஸ்டர் களும், கலைஞர்களும் வேலையிழக்கும் இந்த நிலைமையை மாற்றி "50 சதவிகிதம் தமிழ் கலைஞர்கள், 50 சதவிகிதம் படப்பிடிப்பு நடக்கும் மாநில கலைஞர்களை பயன்படுத்த வேண்டும். இதை முறைப்படுத்த வேண்டும்' என ஸ்டண்ட் யூனியன் தலைவர் ஃபெப்சி விஜயன், ஃபெப்சி தலைவர் அமீரிடமும், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரிடமும் மூன்று மாதத்திற்கு முன்பு கோரிக்கை மனு கொடுத்தார்.

வெளியேற்றுவோம்!

ஃபெப்சி இதை கண்டுகொள்ளாததால், ஃபெப்சியை முற்றுகையிட்டு போராட்டமெல் லாம் நடத்தியும் நிவாரணம் கிடைக்காததால் "ஃபெப்சி அமைப்பிலிருந்து வெளியேறிய ஸ்டண்ட் யூனியன், தலைவர் அமீரையும் செயலா ளர் சிவாவையும் ஃபெப்சி அமைப்பிலிருந்து விரட்டாமல் ஓயமாட்டோம்' என தங்களுக்குள் அறிவித்ததோடு, ஸ்டிரைக்கும் அறிவித்தது.

அதாவது... "இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காதவரை தமிழ்ப்படங்களின் சண்டைக் காட்சி படப்பிடிப்புகள் நடக்காது' என  விஜயன் மாஸ்டர் அறிவித்தார். இதனால் ஹைதராபாத்தில் நடக்கவிருந்த அஜீத் படத்தின் சண்டைக் காட்சி ஷூட்டிங் நிறுத்தப்பட்டது.


பாரதிராஜா Vs அமீர்!

இந்த விஷயத்தில் "ஸ்டிரைக்கை கைவிடும் படி' கேட்டுக்கொண்டாலும் கூட "விஜயன் கோரிக்கை நியாயமானது' என ஆதரவளிக்கிறார் பாரதிராஜா.

ஆனால், "எந்த ஸ்டண்ட் கலைஞர்களை வேண்டுமானாலும் வைத்துப் படப்பிடிப்பு நடத்தலாம். ஸ்டண்ட் யூனியனின் ஸ்டிரைக்கை பொருட்படுத்த வேண்டாம்' என கவுன்சிலிடம் சொல்லிவிட்டது ஃபெப்சி.

தனுஷ் படத்துக்கு சிக்கல்! 

இந்நிலையில் தனுஷ்-நஸ்ரியா நசீம் நடித்துவரும் "நையாண்டி' படத்திற்கான சண்டைக் காட்சியை கும்பகோணத்தில் எடுக்கத் திட்டமிட்டிருந்தார் டைரக்டர் சற்குணம். கடந்த 29-ந் தேதியன்று ஸ்டண்ட் ஸீன் எடுக்க யூனிட்டும் கும்பகோணத்தில் தயாராக இருந்தது.

எஸ்.ஏ.சி. - விஜயன் மோதல்!

விஷயமறிந்த விஜயன் "ஷூட்டிங் ஸ்பாட்டுக் குப் போய் பிரச்சினை பண்ணுவோம்' எனச் சொல்ல... 28-ந் தேதியன்று கவுன்சிலில் அவசரக் கூட்டம் நடந்தது. அதில் பேசிய விஜயன், "எங்க கோரிக்கைக்கு தீர்வு ஏற்படாமல் சண்டைக் காட்சிகள் படமாக்கினா விளைவுகள் கடுமை யாக இருக்கும்' என்றார். "நான் ரொம்ப கோபக் காரன். எனக்குக் கோபம் வந்தா தாங்கமாட் டீங்க' என எஸ்.ஏ.சி. சொல்ல... "உங்களை மாதிரி பல பேரோட கோபத்தை நான் பார்த்திருக் கேன்' என பதிலுக்கு விஜயன் சொல்ல... தகிப்பு தணியாமலே கூட்டம் முடிந்தது.

தாக்குதலுக்கு தயாரான ஃபைட்டர்கள்!

இந்த வாக்குவாதம் கௌரவப் பிரச்சினை யானதால் "திட்டமிட்டபடி சண்டைக் காட்சி களை எடுங்க, ஃபெப்சி நமக்கு சப்போர்ட்டா இருக்கு' என "நையாண்டி' டீமிற்கு கவுன்சில் தகவல் அனுப்பியது. அவர்களும் மறுநாள்  படப்பிடிப்பிற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்துகொண்டிருந்தனர். 

இதைக் கேள்விப்பட்டதும் சென்னையில் இருக்கும் ஸ்டண்ட் யூனியன் ஏரியாவே கொந் தளித்தது. 20 வேன்களில் ஸ்டண்ட் கலைஞர் கள், கும்பகோணம் செல்ல திட்டமிட்டார்கள். அதன்படி  வேன்களும் ரெடி... ஆட்களும் ரெடி. நிலைமை ரொம்பவே பதட்டமாவதைத் தெரிந்துகொண்ட "நையாண்டி' குழு "ஷூட்டிங் கை நிறுத்திடறோம்' என பேக்-அப் ஆகி சென்னை வந்துவிட்டது.

ஈகோவால் பிரச்சினை இப்போதைக்கு முடியாது போல.


ad

ad