புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஜூன், 2013

உத்தரகாண்டில் 5 ஆயிரம் பேர் பலி: மீண்டும் 2 இடங்களில் நிலச்சரிவு 
உத்தரகாண்ட் மாநிலத்தில், கேதர்நாத், பத்ரிநாத், ஹரித்துவார் உள்ளிட்ட புனிதத்தலங்கள் அமைந்துள்ள பகுதிகளில் கடந்த வாரம்
வரலாறு காணாத அளவில் பேய் மழை பெய்தது. இதில் பெரும் நிலச்சரிவும் ஏற்பட்டது.

உத்தரகாண்டில் ரிஷிகேசம்- உத்தர்காசி இடையே இரண்டு இடங்களில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. தொடர் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவால் மீட்பு பணிகள் பாதிப்பு அடைந்துள்ளன. தொடர்ந்து மேகமூட்டம் இருப்பதால் காலை முதல் ஹெலிகாப்டரும் இயக்கப்படவில்லை. இதனால் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர்.

5 ஆயிரம் பேர் பலி
இந்த நிலையில் வெள்ளத்தில் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட அம்மாநில  மந்திரி யாஷ்பால் ஆர்யா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இதுவரை 5 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர் என்று தெரிவித்தார். மேலும் கேதர்நாத் பள்ளதாக்கு, கோவில் ஆகிய பகுதிகளில் சிக்கிய அனைவரும் இன்று மீட்கப்பட்டுவிடுவார்கள்  என்று அவர் தெரிவித்தார்.

ad

ad