புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஜூன், 2013

சவூதி அரேபியாவில் வாரயிறுதி நாட்கள் மாற்றம்
செல்வ வளம் கொழிக்கும் அரபு நாடுகளில் பொருளாதார வசதி படைத்த மிகப்பெரிய நாடாக சவூதி அரேபியா கருதப்படுகிறது.


உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களும் வார இறுதி (விடுமுறை) தினங்களாக கடைபிடிக்கப்பட்டு வந்த நிலையில் அரபு நாடுகளில் மட்டும் நீண்ட காலமாகவே வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமை தான் வார இறுதி நாட்களாக இருந்து வந்தது.

இந்நிலையில், இந்த நடைமுறையை மாற்றி வெள்ளி மற்றும் சனிக்கிழமையை வார இறுதி விடுமுறை தினமாக ஓமன் நாட்டின் அரசு கடந்த மாதம் அறிவித்தது.

இதனையடுத்து, சவூதி அரேபிய அரசும் வெள்ளி மற்றும் சனிக்கிழமையை வார இறுதி தினங்களாக அறிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை முதல் வியாழக்கிழமை வரையிலான 5 நாட்களை வார வேலை நாட்களாக அங்கீகரித்து சவூதி மன்னர் அப்துல்லா ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் இதன் மூலம் வளைகுடாவில் உள்ள இதர நாடுகளுடன் வேலை நாட்களில் எளிதாகவும் விரைவாகவும் தொடர்பு கொள்ள முடியும் என சவூதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ad

ad