புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஜூன், 2013

ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இலங்கை
இலங்கையை மிகவும் ஆபத்தான நாடாகப் பட்டியலிட்டுள்ள பிரித்தானியக் குடிவரவுத்துறை, அங்கிருந்து பிரித்தானியா வருவோரைக் கட்டுப்படுத்த இறுக்கமான நடைமுறையைக் கொண்டு வந்துள்ளது.
பிரித்தானியக் குடிவரவுத்துறையின் புதிய நடைமுறையின்படி, ஆறு ஆசிய, ஆபிரிக்க நாடுகளில் இருந்து பிரித்தானியாவுக்கு வருவோர் 3 ஆயிரம் பவுண்ட்சை பிணைப் பணமாகச் செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், அவர்கள் நுழைவிசைவுக் காலம் முடிந்த பின்னரும் பிரித்தானியாவில் தங்கியிருந்தால் அந்தப் பிணைப் பணத்தை அவர்கள் இழக்க நேரிடும்.
இந்த புதிய நடைமுறை இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஸ், நைஜீரியா, கானா ஆகிய நாடுகளுக்குப் பொருந்தும் என்று பிரித்தானிய உள்துறைச்செயலாளர் தெரெசா மே தெரிவித்துள்ளார்.

ad

ad