-

12 ஜூன், 2013

மாகாணசபை கூட்டமைப்பிடம் சென்றுவிடக்கூடாது என அரசு நெருக்கடி- செல்வம் குற்றச்சாட்டு

வடமாகாணசபை தமிழ் கூட்டமைப்பிடம் சென்றுவிடக் கூடாது என்பதற்காக சிறிலங்கா அரசு பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்தி வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

சுவிட்சர்லாந்திற்கு வருகை தந்திருக்கும் செல்வம் அடைக்கலநாதன் ஜி.ரி.விக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் இதனை தெரிவித்தார்.
ஒருபுறம் மாகாணசபையின் அதிகாரங்களை பறிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வரும் அதேவேளை மறுபுறம் வடமாகாணசபை தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் சென்றுவிடக் கூடாது என்பதற்காக இராணுவ ரீதியாக மக்களுக்கு அச்சுறுத்தல்களை விடுத்து வருகிறது என அவர் தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறலாம் என கருதப்படுபவர்களை இராணுவத்தினர் நேரடியாக அச்சுறுத்தி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். அவரின் முழுமையான செவ்வியை இங்கே காணலாம்
 6 0 0 6
 
- See more at: http://www.thinakkathir.com/?p=50697#sthash.t4zlHWMZ.dpuf

ad

ad