புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஜூன், 2013

நான் முன் வைத்த கோரிக்கைகளை முதல்வர் கனிவுடன் பரிசீலிப்பதாக கூறினார்: தேமுதிக எம்எல்ஏ பாண்டியராஜன்
சென்னை கோட்டையில் புதன்கிழமை ஜெயலலிதாவை சந்தித்த பிறகு விருதுநகர் தேமுதிக எம்எல்ஏ பாண்டியராஜன் செய்தியாளர்களிடம்
பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது, விருதுநகர் தொகுதி பிரச்சனைகளுக்காகவே முதல்வரை சந்தித்தேன்; விருதுநகர் ராமமூர்த்தி நகரில் மேம்பாலம் அமைப்பது, பாதாள சாக்கடை திட்டத்தை விரைவுபடுத்துவது, விருதுநகர் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சனையை போக்க கூட்டுகுடிநீர் திட்டத்தை செயல்படுத்துவது, அரசு மருத்துவமனை தரத்தை மேம்படுத்துவது, விருதுநகரில் மருத்துவ கல்லூரி அமைப்பது, தொகுதிக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என ‌கோரிக்கை விடுக்கவும், கவுசிகா மகா நதியை சீரமைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைப்பதற்காகவே முதல்வரை சந்தித்தேன்; நான் முன் வைத்த கோரிக்கைகளை ஏற்ற முதல்வர் கனிவுடன் அவற்றை பரிசீலிப்பதாக கூறினார்; 
தொலைநோக்கு பார்வையுடன் தமிழக முதல்வர் பல்வேறு நடவடிக்கைகள், திட்டங்கள் மூலம் தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றி வருவதற்கு வாழ்த்துத் தெரிவித்தேன். இவ்வாறு மா.பாண்டியராஜன் தெரிவித்தார். 
தேமுதிக கட்சியில் இருந்து கொண்டு முதல்வரை சந்தித்துள்ளதற்கு கட்சியுடனான கருத்து வேறுபாடு காரணமா என கேட்டதற்கு, தொடர்ந்து தேமுதிகவுடன் இணைந்து செயலாற்றுவேன் என பதிலளித்த பாண்டியராஜன், ராஜ்யசபா தேர்தல் குறித்த கேள்விக்கு தெரியாது என பதிலளித்தார்

ad

ad