புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஜூன், 2013

பரிசின் வீதிகளில் செப்டெம்பர் முதல் வேக மாற்றம்!!! (காணொளி)

.
பிரான்சின் தலைநகரமான பரிசில் மட்டும் பாடசாலை, கல்லூரி மற்றும் உயர்கல்வி நிலையங்கள் என 1300 கல்வி நிலையங்கள் (établissements scolaires) உள்ளன. இதன் சுற்றுப்பகுதிகள் போக்குவரத்துகளிலிருந்து பாதுகாக்கப்படுகின்றன. இதனை அண்டிய பகுதிகள் முழுவதும் ZONE 30 ஆக மாற்றம் அடைகின்றன.
ஏற்கனவே உள்ளதோடு புதிதாக 23 வீதிகள் ZONZ 20 ஆகச் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த வீதிகள் ஏற்கனவே வாகனங்களாலும் வர்த்தக நிலையங்களாலும் ஈருருளிகளாலும் பாதசாரிகளாலும் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் அனைவரின் பாதுகாப்பிற்காகவும் இந்த 23 புதிய வீதிகள் இந்த மணிக்கு 20 கிலோமீற்றர் வேகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படுகின்றன.
மொத்தமாக 560 கிலோமீற்றர் நீளமுள்ள வீதிகள் அதாவது மொத்தப் பரிசின் வீதிகளின் 37% மான வீதிகள் ZONE 30 ஆக ஆக்கப்படுகின்றன. இதில் பரிசின் எட்டாவது பிரிவு மட்டும் (PARIS VIII) இந்தப் புதிய வேகக் கட்டுப்பாட்டிற்குள் இன்னமும் அடக்கப்படவில்லை. இதன் மாநகரசபை முதல்வரான முன்னாள் ஆளுங்கட்சியான UMP யைச் சேர்ந்த François Lebel ஏனைய பகுதிகளின் வேகமாற்றத்தோடு ஒத்துழைக்கச் சம்மதம் அளிக்கவில்லை.
பரிசின் சனத்தொகையில் 60சதவீதமானோரின் போக்குவரத்துக்கள் நடந்து செல்வதன் மூலமே நடைபெறுகின்றன. 27 சதவீதமானோர் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துகின்றனர். 7 சதவீதமானோர் மகிழுந்துகளையும் 4 சதவீதமானோர் ஈருருளிகளையும் பயன்படுத்துகின்றனர். பரிசிலுள்ளோரில் 60 சதவீதமானோரிடம் மகிழுந்துகளோ வேறு வாகனங்களோ இல்லை.

இத்தோடு ஏற்கனவே பரிஸ் 10 இல் பரீட்சிக்கப்படுவது போல் ஈருளியில் வருவோர் குறிக்கப்பட்ட சில சிவப்பு விளக்குகளில் வலது பக்கம் திரும்புவதற்காக மட்டும் சிவப்பு விளக்கைத் தாண்டும் உரிமை வழங்கப்படுகின்றது. இது வீதி விதி முறைகளிலும் (Code de la route) 2012 முதல் இணைக்கப்பட்டுள்ளது. இதனை ஏனைய பிரிவுகளின் ZONZ 30 களிலும் செப்டெம்பர் மாதம் முதல் நடைமுறைப்படுத்த பரிஸ் மாநகரசபை முடிவெடுத்துள்ளது.


ad

ad