புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜூலை, 2013

கடலூர்: மதிய உணவு சாப்பிட்ட 152 மாணவிகள் வாந்தி மயக்கம்
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 300 பேர் 18.07.2013 விழாயன் அன்று மதிய உணவு சாப்பிட்டனர். சாதம் மற்றும் முட்டை சாப்பிட்டுள்ளனர், மதிய உணவு சாப்பிட்ட 152 மாணவிகளுக்கு சிறிது நேரத்தில்
வாந்தி மயக்கம் ஏற்பட்டது.

இதனால் அவர்கள் அனைவரும் உடனடியாக என்.எல்.சி. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு மாணவிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் நெய்வேலியில் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளியில் உள்ள மற்ற மாணவிகளுக்கும் உடல் நலப் பரிசோதனை நடத்தப்பட்டது.
இது குறித்து மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கூறுகையில், மாணவிகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்‌லை. ஆபத்து எதுவுமில்லை என்றனர். 
மாவட்ட கலெக்டர் கிர்லோஸ்குமார் பாதிக்கப்பட்ட மாணவிகளை பார்த்து விவரம் கேட்டறிந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள மாணவிகள் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மாணவிகள் மா‌லைக்குள் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கிறது.
மதிய உணவில் பல்லி விழுந்ததா அல்லது விஷ பொருள் எதுவும் கலப்படம் ஆனதா என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர். பள்ளியில் உள்ள குடிநீரால் இந்த பாதிப்பு ஏற்பட்டதா என்றும் விசாரித்து வருகின்றனர்.

ad

ad