புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜூலை, 2013

பெருமாள் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்துகிறார் ஜெ., :
கொடநாட்டில் இருந்து புறப்பட்டார்
மறைந்த அதிமுக எம்.எல்.ஏ. பெருமாள் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த கொடநாட்டில் இருந்து  பாப்பநாயக்கன் பட்டிக்கு புறப்பட்டார் முதல்வர் ஜெயலலிதா.


கொடநாட்டில் இருந்து கோவைக்கு காரில் சென்றுகொண்டிருக்கிறார்.  கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு சேலம் அரசு கலைக்கல்லூரி மைதானத்திலோ அல்லது வாழப்பாடி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்திலோ தரையிறங்கி அங்கிருந்து கார் மூலம் கல்வராயன்மலை அடிவாரத் தில் இருக்கும் பாப்பநாயக்கன் பட்டிக்கு சென்று நேரில் அஞ்சலி செலுத்துகிறார்.
சேலம் மாவட்ட காவல்துறையினர் இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஏற்காடு தொகுதியின் அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.பெருமாள் (62) மாரடைப்பால் இன்று மரணமடைந்தார்.  ஆத்தூர் வட்டம் தும்பல் அருகேயுள்ள பாப்பநாயக்கன்பட்டியில்  பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த பெருமாளுக்கு பி.சரோஜா என்ற மனைவியும் ராஜேஷ் கண்ணா, சுரேஷ் கண்ணா, சதீஷ், கார்த்திக் ஆகிய மகன்களும் உள்ளனர்.
 கடந்த 1977-ம் ஆண்டு முதல் அதிமுகவில் இருந்து வந்தார். சேலம் கிழக்கு மாவட்ட அதிமுக துணை செயலர், ஏற்காடு தொகுதி செயலர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகள் வகித்து வந்துள்ளார்.
 ஏற்காடு (எஸ்.டி.) தொகுதியில் கடந்த 1989-ம் ஆண்டில் அதிமுக ஜெயலலிதா அணி சார்பில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பெருமாள், கடந்த 1991 - 1996 வரையிலான காலகட்டத்திலும் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக பதவி வகித்துள்ளார். கடந்த 2011 தேர்தலில் திமுக வேட்பாளர் சி.தமிழ்ச்செல்வனை எதிர்த்துப் போட்டியிட்ட பெருமாள், சுமார் 37,500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3-வது முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டார்.

ad

ad