புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜூலை, 2013

நடைபெறவிருக்கும் தேர்தலில் ஐ.தே. க.வுக்கு வாக்களித்து உரிமைகளை உறுதிப்படுத்துங்கள் - சச்சிதானந்தம்

நடைபெறவிருக்கும் மாகாண சபைத் தேர்தல்களில் சிறுபான்மை தமிழ் பேசும் மக்கள் ஐக்கிய தேசிய கட்சியை ஆதரித்து வாக்களித்து சிறுபான்மை மக்களின்
உரிமைகளை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டுமென முன்னாள் பிரதியமைச்சர் எம்.சச்சிதானந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவ்விடயம் குறித்து மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர் 13ஆவது அரசியல் திருத்தம் மூலம் மாகாண சபை முறையை அறிமுகப்படுத்தி சிறுபான்மை மக்களுக்கு அதிக நன்மைகளை பெற்றுக்கொடுப்பதற்கு அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன காரணமாகவிருந்தார்.
அதே போன்று முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் ஆட்சிக்காலத்திலும் தமிழ் மக்கள் அதிக நன்மைகளை பெற்றனர் என்பதை யாரும் மறுக்க முடியாது. அவரது ஆட்சிக்காலத்திலேயே மலையக மக்களுக்கு அதிக வாக்குரிமையும் கிடைத்து அவர்களும் அரசியல் நீரோட்டத்தில் தீர்மானம் எடுக்கும் சக்திகளாக மாற்றம் கண்டனர்.
இதன் காரணமாகவே இன்று மலையகத்தில் தொழிற் சங்க அரசியல் வலுப்பெற்றுள்ளது. ஆனால் இன்றைய நிலையில் சிறுபான்மை மக்களின் அரசியல் உரிமைகள் திட்டமிட்டு முடக்கப்படுவதற்கான திரை மறைவு நடவடிக்கைகளே பல்வேறு மட்டங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எனவே மலையக மக்கள் தமது எதிர்காலம் அரசியல் இருப்பு என்பன குறித்து தீர்க்கமாக சிந்தித்து முடிவுகளை மேற்கொள்ள வேண்டும். மலையக மக்களுக்கு அதிக நன்மைகளை செய்த ஐக்கிய தேசிய கட்சியை மீண்டும் மாகாண சபைகளில் வெற்றி பெற செய்ய ஒத்துழைக்க வேண்டும். அப்போதுதான் எமது உரிமைகளை பாதுகாக்க முடியுமென சச்சிதானந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.

ad

ad