புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜூலை, 2013




             ரண்டாவது வாரமாகத் தொடர்கிறது, என்.எல்.சி. தொழிலாளர்களின் வேலை நிறுத்தம்!

மூன்றாயிரம் போலீசாரைக் குவித்து, வாகனங்களுக்கு டீசல், பெட்ரோல் அடித்துக் கொடுத்து,
சாப்பாடு போட்டுவருகிறது நிர்வாகம். பொறியாளர்கள், அதிகாரிகள் என 4,354 பேரை போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்கின்றனர். தற்காலிக ஒப்பந்தத் தொழிலாளர்களை அமர்த்தி, அதிக சம்பளம் கொடுத்து, இருக்கும் கரியை வைத்து மின் உற்பத்தி செய்யப்படுகிறது.          மின் உற்பத்தி பாதிப்பு இல்லை, நிலக்கரி வெட்டியெடுக்கும் பணி நடக்கிறது என்று திட்டவட்டமாக சொல்லிவருகிறது, நிர்வாகம்! 

இந்நிலையில், கடந்த 10-ம் தேதியன்று, தொழிலாளர்கள் திடீரென அதிரடியான ஒரு முடிவைச் செயல்படுத்தினார்கள். அன்று காலை முதல், குடிநீர் சப்ளை ஆப்ப ரேட்டர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள், எலக்ட்ரீசியன்கள் யாரும் வேலைக்குப் போகவில்லை. இந்த நேரத்தில் இதை நிர்வாகத் தரப்பினர் எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால், இந்த வேலைநிறுத்தத்தால், என்.எல்.சி. அதி காரிகள் வீட்டில் தண்ணீர் வராது, குழாய் உடைந்துபோனால் பழுதுபார்க்க முடி யாது. கொசு மருந்து அடிக்க, பிளீச்சிங் பவுடர் போட, தெருவிளக்கைப் பழுதுபார்க்க, அதிகாரிகள் வீடுகளில்,  மின் கோளாறு ஏற்பட்டால் சீர் செய்ய யாரும் வரமாட்டார்கள். இந்த அதிரடி தொடரும் என்கிறார்கள், தொழிலாளர்கள் தரப்பில்.

முந்தைய நாளன்று, முதல் மின் நிலையத்தை முற்றுகையிட, க்யூ பாலத்திலிருந்து தொழிலாளர்கள் ஊர்வலமாகச் சென்றதைப் பார்த்து, போலீஸ் மிரண்டுபோனது. கைது எண்ணிக்கை அதிகமானால், சிக்கல் ஆகிவிடும் என்பதால், வழியிலேயே அவர்களைத் தடுத்து, கைதுசெய்தனர். அருகில் உள்ள 10, 26 பிளாக்குகளில் பள்ளியில் கொண்டுபோய் விட்டனர். இந்த தந்திரத்தை உடனடியாகப் புரிந்துகொண்டு, உஷாரான மீதத் தொழிலாளர்கள், இருசக்கர வாகனங்களில் சென்று, அந்தப் பள்ளியை நிறைத்தனர். திரண்ட கூட்டத்தைப் பார்த்து, மிரண்டு போன போலீசார் அவர்களை விடுதலை செய்தனர். 



இன்னொரு பக்கம், தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர், அஞ்சலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். அதில் பேசிய வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், ’’ ""என்.எல்.சி.யை மூடத் தயாராகிவிட்டார்கள், தனியார் ஆகிவிட்டால் வேலை கேட்கமுடியுமா? 13 ஆயிரம் தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய, இன்னும் எவ்வளவு காலம் ஏமாற்று வீங்க? நீதிமன்றத்தையும் மதிக்கமாட்டீங்க, எந்த ஊரு நியாயம்யா இது? பங்குகளை விற்கக்கூடாதுன்னு தொழிலாளி போராடு றான். உற்பத்தி பாதிப்பு இல்லைங்குது, நிர்வாகம். இப்படியே விட்டுடலாமா? 13 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளி வாழ, 2 பேர் செத்தாலும் பரவாயில்லை. துப்பாக்கிச்சூடு கூட நடத்தட்டும், என் முந்திரி நிலத்தை வித்தாவது, சாகுறவங்க குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் குடுக்கிறேன். இனி நம்ம போராட் டம் வேற மாதிரியா இருக்கணும். முந்திரிக் காட்டுக்கு வாங்க, அங்க பேசுவோம்''’என்று அதிரடியாகப் பேசி, பரபரப்பைக் கிளப்பினார். 

சி.பி.ஐ. மா.செ. சேகர் தலைமையில், கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை அஞ்சலகம் எதிரில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. 

""பங்கரில் இருந்த கரியை இதுவரை பயன்படுத்தினார்கள். அடுத்தது, நிலக்கரி எடுக்க பரந்தஅளவில் ஐந்து அடுக்கு மண்ணை அகற்றிவிட்டு கரி எடுக்க, தயாராக வைத்து இருந்தார்கள். அதைத் தான், இப்போது அதிகாரிகளை வைத்து இயந்திரத்தை இயக்கி, கரியை எடுக்கி றார்கள். அடுத்தகட்டமாக நிலக்கரி எடுக்க, மீண்டும் ஐந்து அடுக்கு மண் எடுக்க வேண்டும். அப்போதுதான் தெரியும் அதிகாரிகளுக்கு. இப்போவே, பராமரிப்பு இல்லாமல் 7-ஆம் தேதி கன்வேயர் பெல்ட் எரிந்து, பல மணி நேரம் போராடிதான் தீயை அணைக்க முடிந்தது. இவ்வளவு நாள், ’என்.எல்.சி. நமது சொத்து, எந்த சேதமும் வந்துவிடக்கூடாது’ என்று இருந்தோம். சுரங்கத்தைப் பாதுகாக்க, முக்கிய இடங்களுக்கு மட்டும் தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், இதை நிர்வாகம், தனக்கு சாதகமாகப் பயன்படுத்துகிறது. இனி போராட்டம் தீவிரமாகும்''’என்றார், சி.பி.ஐ. (எம்.எல்) கட்சியின் டி.டி.யு.சி. சங்கப் பொதுச் செயலாளர் ரவிச்சந்திரன், அழுத்தமாக. 

11-ம் தேதியன்று, மந்தாரக்குப்பத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. அத்துடன், அதிகாரிகளின் குடியிருப்புகளுக்கு இரண்டிரண்டு பேராகச் சென்ற தொழிலாளர்கள், ஆதரவு கேட்டு நோட்டீஸ் கொடுத்தனர். குற்றவாளியைப் பிடிக்கப் போவதைப்போல, அவர்களைப் பின்தொடர்ந்த போலீசார், இப்படி செய்யக்கூடாது என மிரட்டினர். இதை சற்றும் எதிர்பாராத தொழிலாளர்கள், கொதித்துப்போனார்கள். முன்னைவிட ஆவேசமாக நோட்டீஸ்களை விநியோகித்தனர். 

அரசியல் கட்சிகள், மாநில அரசு, மத்திய அரசு என என்.எல்.சி. விவகாரம் ஓடிக்கொண்டு இருக்க, இது புது பிரச்னையாக உருவெடுத் துள்ளது. ""ஒரு பக்கம், முதலமைச்சர் ஜெயலலிதா, தொழிலாளர் நலனுக்காக செயல்படுவதாக சொல்லிக்கொண்டு, அமைதியாகப் போரா டும் எங்களை போலீசை வைத்து பயமுறுத்து வது என்றால், என்ன அர்த்தம்?'' என குமுறுகிறார்கள், என்.எல்.சி. தொழிலாளர் கள்.  

"ஜெ.'’ இதற்கு பதில் சொல்வாரா? 

ad

ad