புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜூலை, 2013




         ர்மபுரி மாவட்டத்தையே கலவரக் காடாக்கிய இளவரசன்- திவ்யா காதல் திருமண விவகாரம், எதிர்பாராத விதமாய் டிராஜிடி திசைக்குத் திரும்ப, காதல் தம்பதிகள் பிரிக்கப்பட்டனர். பிரிவுச் சுமையால் தவித்துக் கொண்டிருந்த இளவரசன், திடீரென கடந்த 4-ந் தேதி மர்மமான முறையில் இறந்து போனார். அவரின் இறப்பு இப்போது விதவிதமாய் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருக்கிறது.

இளவரசனின் உடல் வைக் கப்பட்டிருந்த தர்மபுரி அரசு மருத் துவமனை, முழுக்க முழுக்க போலீஸ் கட்டுப்பாட்டில் வைக்கப் பட்டிருந்த நிலையில் 11-ந் தேதி மதியம் 2.30 மணிக்கு, இளவரசன் தரப்பு வழக்கறிஞரான தமயந்தியும், செங் கொடியும் வெளியே சாப்பிட்டுவிட்டு மருத்துவமனை வளாகத்துக்கு வந்தனர். அப்போது டி.எஸ்.பி. நடராஜன் ""நீங்க இப்படி அடிக்கடி போய்ட்டுவர்றது நோயாளிகளுக்கு தொந்தரவா இருக்கும். அப்படி தள்ளிபோய் நில்லுங்க'' என்றார். ‘""நாங்க இள வரசன் தரப்பு வழக்கறிஞர்கள். எங்களையே உள்ளே விடமாட்டீங்களா?'' என்றனர் இருவரும். 



டி.எஸ்.பி.யோ ""144 தடைபோடப்பட்டிருக்கு. கிளம்புங்க'' என அதட்டலாகச் சொல்ல, தமயந்தியும் செங்கொடியும் ‘போலீஸ் அராஜகம் ஒழிக’ என கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர். இளவரசனின் உறவினர்களும் சென்னையில் இருந்து வந்திருந்த வழக்கறிஞர் ரஜினிகாந்தும் இதில் சேர்ந்துகொள்ள, பதட்டம் உருவானது. அவர்களை சுற்றி வளைத்த போலீஸ், வேனில் ஏற்றியது. அப்போது இளவரசனின் அப்பா இளங்கோவனும், அம்மா கிருஷ்ணவேணியும் ""எங்களையும் கைது பண்ணிக்கங்க'' என்றபடி வேனில் ஏறினர். பி-1 காவல்நிலையத்துக்கு அவர்களைக் கொண்டுபோனது போலீஸ் டீம். 


இந்தத்தகவல் பரவ, அங்கு திரளத்தொடங்கிய கூட்டத்தை படாத பாடுபட்டு போலீஸ் கலைத்தது. இளவரசனின் அப்பா, அம்மாவை போலீஸ், காவல்நிலையத்தை விட்டு வெளியே அனுப்ப முயல, அவர்கள் மறுத்து அடம்பிடித்தனர். முதலில் இளங்கோவனை குண்டுகட்டாகத் தூக்கிவந்து போலீஸ் வேனில் ஏற்றினர். கிருஷ்ணவேணியை அவர்கள் பலவந்தமாக வெளியே இழுத்துவரும் போது வாசல் படியிலேயே அவர் மயங்கிவிழுந்தார். இதைப்பார்த்து ஸ்டேசனில் இருந்த வழக்கறிஞர்கள் சத்தம் எழுப்ப, போலீஸ் ஓடிபோய் முகத்தில் தண்ணீர் தெளித்து மயக்கம் தெளியவைத்தது.  

                                            

போலீஸ் வேனில் கவலையும் துயரமும் அப்பிய முகத்தோடு இருந்த இளங்கோவன் ""ஏற்கனவே மனம் நொந்துபோய்க் கிடக்கும் எங்கள் மீது போலீஸும் தன் பங்குக்கு கொடூரத்தைக் காட்டுது. எங்கமகன் இளவரசனை எதிரிகள் அநியாயமாக் கொன்னுட்டாங்க.. மறுபடியும் திவ்யா வோட சந்தோசமா வாழலாம்ன்னு கனவுகளோட அவன் இருந்தான்யா. எதிர்காலத்தில் அவங்க ரெண்டுபேரும் சேர்ந்துடுவாங்கன்னுதான் திட்டமிட்டே அவனைக் கொன்னுருக்காங்க.  இள வரசனை மூன்றுபேர் தாக்குறதை தூரத்தில் இருந்து சிலர் பார்த்திருக்காங்க. அவங்க ஏதோ சின்னத் தகராறா இருக் கும்ன்னு நினைச்சாங்களாம். இதைப்பத்தி கூட போலீஸில் சொன்னோம். அந்த மூன்று பேர் யார்னு கூட விசாரிக்கலை.

ஆனா அவங்க இது தற்கொலைன்னு சாதிக்கவே துடிப்பா செயல்படறாங்க. எங்களைப் பொறுத்தவரை இளவரசனை கனமான ஆயுதத்தால் தலை யில் தாக்கியிருக்காங்க. அவன் இடது கை யால் தடுக்க முயன்றதால் அங்கும் வெட்டு விழுந்திருக்கு. ஆனா எப்படியாவது இந்த படுகொலை விவகாரத்தை மூடிமறைக் கணும்ன்னு போலீஸ் பரபரப்பா செயல் படுது. அது யாரைக் காப்பாற்ற இப்படி செயல்படுதுன்னு தெரியலை. எங்க தரப் பையே மேலும் மேலும் நோகடிக்கிறாங்க''’ என்றார் கொஞ்சம் காட்டமாகவே. கிருஷ்ணவேணியும் வேனில் ஏற்றப்பட, அவர்களை மருத்துவமனையில் கொண்டுபோய்விட்டது போலீஸ்.

கைது செய்யப்பட்டிருந்த அவர்களின் வழக்கறிஞரான      ரஜினிகாந்தோ ""இளவரசனின் கடிகாரம், டிராக் ஓரத்தில் கழற்றி வைக்கப் பட்டிருக்கு. ஆனா அவரது கடிதத்தை மட்டும் அவர் பேண்ட் பாக்கெட்டில் இருந்து ஒருத்தர் எடுத்து பதுக்கி வச்சிருந்ததா போலீஸ் சொல்லுது. ரயிலில் விழுந்தா, அந்தக் கடிதத்தையும் பத்திரமா இளவரசன் அந்த கடிகாரத்துக் கிட்டயே வச்சிருக்கமாட்டாரா? ரயில்ல விழுந்தா கடிதம் உருக்குலைஞ் சிடும்ன்னு இளவரசனுக்குத் தெரியாதா? இது அப்பட்டமான படுகொலை. இதற்கு உரிய தீர்வை அடையாமல் ஓயமாட்டோம்'' என்றார் அழுத்தமாய். வழக்கறிஞர்கள் ரஜினிகாந்த், தமயந்தி மற்றும் செங்கொடி உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் இளவரசனுக்கு அஞ்சலி செலுத்த திவ்யா வருவாரா? என்ற கேள்விக்கான  புதிரை,  திவ்யாவே அவிழ்த்திருக்கிறார். திவ்யாவுக்கு மருத்துவ கவுன்சிலிங் கொடுக்க மருத்துவர் டீமோடு, அவர் வீட்டிற்கு சென்ற எஸ்.பி. அஸ்ரா கார்க்கும் ஆர்.டி.ஓ.மேனகாவும் ""இளவரசனுக்கு அஞ்சலி செலுத்த உனக்கு விருப்பம் இருந்தால் அதைக் கைப்பட எங்களுக்கு எழுதிக்கொடு. இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் இருப்ப தால் உன் விருப்பம் முக்கியம். நீ விரும்பினால் அதற்கான ஏற்பாடுகளை செய்து தரு கிறோம்''’என்று சொல்லிவிட்டு வந்திருந்தனர். இந்த நிலையில் நாம் திவ்யாவை கடந்த இதழில் வெளியான பேட்டிக்காக சந்தித்தபோது இது குறித்தும் திவ்யாவிடம் கேள்வி எழுப்பினோம். அப்போது அவர் அம்மா தேன்மொழி, ‘ இப்போது இருக்கும் நிலையில் எப்படி போகமுடியும்?’ என்று சொன்னதையும் அதே பேட்டிக் கட்டுரையில் குறிப்பிட்டி ருந்தோம். இதை உறுதிப்படுத்தும் விதமாகவே திவ்யா மாவட்ட நிர்வாகத்திற்கும் காவல் துறைக்கும் கடிதம் கொடுத்திருக்கிறார். இது குறித்து திவ்யா தரப்பிடம் விசாரித்தபோது ""வி.ஏ.ஓ. மூலம் திவ்யாவின் பதிலைக் கடிதமா கேட்டாங்க. திவ்யாவோ இளவரசனை சடலமாக என்னால் பார்க்க முடியாதுன்னு அழுதபடியே தீர்மானமா சொல்லிவிட்டாள். அதனால் அவள் கைப்பட, இப்போதைய சூழலில் நான் அஞ்சலி செலுத்த விரும்பவில்லைன்னு கடிதம் எழுதிக்கொடுத்துவிட்டாள்'' என்றார்கள் வருத்தமாய்.

இளவரசன் விவகாரத்தில் அடுத்த அத்தியாயம் என்னவாக இருக்கப்போகிறதோ? 

ad

ad