புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜூலை, 2013

,


தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு உதவியதை ஒப்புக் கொண்டார் வாட்டர்லூ சுரேஷ் 
 கடந்த 2006 இல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு உதவி செய்தவர்கள் என்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் சுரேஷ் சிறிஸ்கந்தராஜா உட்பட ஆறு இளைஞர்கள் அமெரிக்காவின் எப்,பி.ஐ மற்றும் கனடிய காவல்துறையின் கூட்டு நடவடிக்கைகளினால் கைது
செய்யப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு கடந்த சில ஆண்டுகளாகவே கனடிய நீதிமன்றில் நடைபெற்று வந்தது. கடந்த டிசம்பர் மாதம் கனடாவில் நடைபெற்ற வழக்கு விசாரணைகள் ஒரு வழியாக முடிவுக்கு வந்து நியூயார்க் காவல்துறையிடம் சுரேஷ் ஒப்படைக்கப்பட்டார்.
 
இது தொடர்பில் வாட்டர்லூ சுரேஷ் என கனடிய மக்களால் அழைக்கப்படும் சுரேஷ் சிறிஸ்கந்தராஜா  ப்ரூக்ளின் நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்டிருந்தார். 
கடந்த செவ்வாய்கிழமை பிற்பகல் வேளையில் ப்ரூக்ளின் நீதிமன்றில் தனியறையில் வைத்து நடைபெற்ற விசாரணையில் தான் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு உதவியதை சுரேஷ் ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

கனடிய குடியுரிமை பெற்றவறான சுரேஷ் , குற்றத்தை ஒப்புக்கொண்டதினால் அவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டை கிடைக்கலாம் என எதிர்பார்க்கபப்டுகிறது. இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர் என்ற போதிலும் கூட கனடிய குடியுரிமை பெற்றவர் என்பதால் கைது செய்யப்பட்டு தற்போது அனுபவித்த தண்டனைக் காலத்தை தவிர எஞ்சிய காலங்களை அவர் கனடாவில் அனுபவிக்க வேண்டியிருக்கும்.

நீதிமன்ற இறுதித் தீர்ப்பு வெளியான பின்னர் விரைவில் சுரேஷ் கனடிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட  உள்ளார். வோட்டர்லூ பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்ற சுரேஸ்,விடுதலைப் புலிகளுக்காக அமெரிக்க வங்கிகள் ஊடாக 13 ஆயிரம் டொலர் நிதி சேகரித்ததாகவும்ரமணன் மயில்வாகனத்துடன் இணைந்து இரவுப்பார்வை கருவிகள்இலத்திரனியல் கருவிகள்,நீர்மூழ்கி வடிவமைப்பு மென்பொருள்களை வாங்க முயன்றதாகவும் அமெரிக்க சட்டவாளர்களால் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தார்.
இது ஒருபுறமிருக்க சுரேஷ் சிறிஸ்கந்தராஜாவை எந்த நிலையிலும் தீவிரவாதத்திற்கு உதவியதாக ஏற்றுக் கொள்ள முடியாது என்பதே மக்களின் எண்ணமாக உள்ளது. சுரேஷ் ஒரு துடிப்புள்ள இளையவர் மட்டுமல்லாது சிறந்த இளைஞர் என்பதே ஒட்டு மொத்த சமுதாயத்தினது கருத்து. வல்லெட்டி துறையில் பிறந்த இவர் கனடா வந்து 15 வருடங்களுக்கு பின்னர் கடந்த 2004 ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆழிப் பேரலைக்குப் பின்னர் தாயகம் திரும்பி சிறிது காலம் அங்கு சில சமூக சேவைகளை செய்துள்ளார்.

வாட்டர்லூ  பல்கலைக்கழகத்தில், (University of Waterloo) பொறியியல் பட்டம் உட்பட மூன்று துறைகளில் பட்டம் பெற்ற சுரேஷ் தான் பல்கலைக்கழகத்தில் பயின்ற காலகட்டங்களில் தமிழ் மாணவர் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார் மூன்று மொழிகளில் புலமை பெற்றவராகவும் திகழ்ந்துள்ளார். பல தொண்டு நிறுவனங்களுக்கும் , கூட்டமைப்புக்களுக்கும் இணைய தளம் வடிவமைத்துக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததோடு , தொண்டுள்ளத்தோடு செயல்பட்டமைக்காக மக்கள் அனைவரிடமும் நற்பெயர் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
தன்னுடைய வாழ்நாளை சிறையில் வீணடிப்பதைத் தான் விரும்பவில்லை என்றும் விரைவில் வெளியில் வந்து மீண்டும் சமுதாயத்திற்காக தொண்டு  செய்வதே தன்னுடைய கனவு என்பதையும் கடந்த 2010 இல் கனடிய பிரதான ஊடகமான நேஷனல் போஸ்ட்டுக்கு அளித்த நேர்காணலில் சுரேஷ் தெளிவுபடுத்தியிருந்தார் 
தமிழ் மக்களுக்காக உண்மையில் தொண்டுள்ளத்துடன் செயலாற்றி வந்த கனேடியத் தமிழரான சுரேஷ், விடுதலைப் புலிகளுக்காக நிதி சேகரித்த்தாகவும்கருவிகளை வாங்க முயற்சித்தாகவும்குற்றம்சாட்டி அவருக்கு எதிராக மேற்கொள்ளப்படும்  சட்ட நடவடிக்கையை கைவிடும் படி அமெரிக்காவிடம் சிறிலங்கா அரசாங்கமும் கோரிக்கை விடுத்திருந்தது. இருப்பினும் சிறிலங்க அரசாங்கத்தின் கோரிக்கையை அடிப்படையாக வைத்து சுரேஸ் சிறீஸ்கந்தராஜா சார்பில் கோரப்பட்ட பிணைக்கு நீதிபதி அனுமதி மறுத்து விட்டார்.
 

ad

ad