புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜூலை, 2013

,

திருகோணமலை ஐந்து மாணவர்கள் படுகொலை சம்பவம்!- 12 அதிரடிப்படையினர் கைது
2006ம் ஆண்டு ஜனவரி 2ம் திகதியன்று திருகோணமலை கடற்கரையில் வைத்து ஐந்து மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விசேட அதிரடிப்படை வீரர்கள் 11 பேரும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருமாக 12 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் விசேட அதிரடிப்படையின் சிரேஸ்ட அதிகாரி ஒருவரும் அடங்குகிறார்.
அத்துடன் பொலிஸ்காரர் ஒருவரும் இரகசிய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் கைதுசெய்யப்பட்ட 12 பேரும் நேற்று வியாழக்கிழமை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.
இதனையடுத்து குறித்த 12 பேரையும் எதிர்வரும் 18ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஏற்கனவே இந்த கொலைகள் தொடர்பில் படையினர் மீது குற்றம் சுமத்தப்பட்ட போது அதனை இலங்கை அரசாங்கம் முற்றாக மறுத்துவந்தது.
எனினும் சர்வதேச ரீதியாக மேற்கொள்ளப்பட்ட அழுத்தங்கள் காரணமாகவே தற்போது விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் கொல்லப்பட்ட மாணவர்களில் ஒருவராக ரஜிதரின் தந்தையான டொக்டர் காசிப்பிள்ளை மனோகரன், கடந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலும் சாட்சியமளித்திருந்தார்.
சம்பவத்தின் போது ரஜிதருடன் யோகராஜா ஹேமசந்திரன், லோகிதராஜ் ரோஹன், தங்கதுரை சிவானந்தா, சண்முகராஜா கஜேந்திரன் ஆகியோரே கொல்லப்பட்டவர்களாவர்.
இதேவேளை இந்த மாணவர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டே கொல்லப்பட்டார்கள் என்பதனை தமது புகைப்படத்தின் மூலம் பத்திரிகை ஒன்றில் வெளியிட்ட ஊடகவியலாளரான சுப்பிரமணியன் சுகிர்தராஜனும் பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad