புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜூலை, 2013

,

இளவரசன் பிரேதப் பரிசோதனை தொடர்பான மனு உயர்நீதிமன்றத்தில் தாக்கல்
தருமபுரியில் திவ்யாவை காதல் திருமணம் செய்த இளவரசன் வியாழக்கிழமை தர்மபுரி அரசு கலைக்கல்லூரி பின்புறம் உள்ள
ரயில்வே தண்டவாளத்தின் அருகே சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது உறவினர்கள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளனர்.

இன்று காலை இரு மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ள தருமபுரி மருத்துவமனைக்குச் சென்றனர். ஆனால், அங்கே 200க்கும் அதிகமானோர் கூடியிருந்து, அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை. 
இந்தநிலையில் இளவரசனின் பிரேதப் பரிசோதனை தொடர்பான மனு இன்று (05,07,2013) உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நாங்கள் சொல்லும் மருத்துவர்கள்தான் பிரேதப் பரிசோதனையை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று இளவரசனுக்காக வாதாடிய வழக்குரைஞர் சங்கரசுப்பு நீதிபதி தனபாலன் அமர்வில் முறையிட்டார். இது தொடர்பான வழக்கு 12 மணிக்கு விசாரிக்கபப்டும் என்று கூறப்பட்டது.

ad

ad